கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது. உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார். “இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின் மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு,…
Read MoreAuthor: NR Sharavanan
சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கம்
1Apr 2013: சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கப்பட்டது என திரு மைக்கேல் ஞாயிறன்று கூறினார். ஞாயிறன்று பெய்ஜிங் மற்றும் அண்டை பகுதிகளில் வேலை செய்யும் 70 தமிழ் நிபுணர்களால் சீனாவில் முதல் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது. இவை சீனாவில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வளர்ந்து வருவதை குறிப்பதாகும். புதிய தமிழ் சங்கம் முக்கியமாக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தப்படும் என்று, திரு மைக்கேல் கூறினார். பெருவாரியான தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா இருந்து ஞாயிறு பெய்ஜிங் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read Moreவட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.
வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேசக் கண்டனங்களை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.…
Read Moreதமிழ்ப் புத்தாண்டு:கோவில்களில் இன்று லட்சார்ச்சனை வழிபாடு
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முக்கிய கோவில்களில் ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை வழிபாடும், ஆன்மீக சமய சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், ஒப்பிலியப்பன் கோவில் திருச்சேறை சாரநாத பெருமாள் மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்களில் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
Read Moreதமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் கே. ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆளுநர் கே. ரோசய்யா: தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி, பைசாகி மற்றும் விஷு பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெறுப்பை அகற்றி அன்பு, இரக்கம் மற்றும் கருணை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம். இப் புத்தாண்டில் நம்மிடையே ஒற்றுமை ஓங்கி இந்தியாவிலும், தமிழகத்திலும் அமைதியும், வளமும் கொழிக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா: தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் உலகெங்கும் வாழும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் தாய் மொழியாம் தமிழ், பழம்பெருமையும்,…
Read Moreவீடு திரும்பினார் கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்!
நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஜெசி ரைடர் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் பார் ஒன்றின் அருகில் மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். படுகாயமடைந்த இவர் மருத்துவமனையி அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார். கோமாவிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ள ரைடருக்கு மற்ற விடயங்கள் நினைவில் உள்ளபோதும், அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மட்டும் நினைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreநான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்
“”மற்றவர்களைப்போல நானும் சாதரண மனிதன் தான். கிரிக்கெட் கடவுள் அல்ல,” என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்து சாதித்தார். இவரை, இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் கடவுளாக பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கூறியது:நான் கிரிக்கெட்டின் கடவுள் இல்லை. கடவுள் எப்போதும் தவறுகள் செய்யாதவர். போட்டிகளில் மற்ற வீரர்களைபோல நானும் தவறுகள் செய்கிறேன். இந்திய வீரர் கவாஸ்கரைப்போல் ஆக வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. பின் வளர்ந்துவரும் காலங்களில் நான் மிகவும் ரசித்தவர் ரிச்சர்ட்ஸ். அவரின் ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதனால் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் கலந்த கலவையாக நான் உருவெடுக்க விரும்பினேன். எனது 100வது சதத்தை எட்டிய போது குதித்து ஆரவாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில்…
Read Moreஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் மற்று ம் எம்.கே. திவாரி இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, காலிஸ், யூசுப் பதான் மற்றும் மார்கன் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, சுழ ற் பந்து வீரர் சுனில் நரீன் நன்கு பந்து வீசி டெல்லி அணியின் 4 முக்கிய விக் கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக பிரட்லீ, பாட்டியா மற்றும் பாலாஜி ஆகியோர் பந்து வீசினர். இந்தியன் பிரீமியர் லீக்கின் டி – 20 போட்டி நேற்று துவங்கியது. கொல்க த்தாவில்…
Read Moreதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 28 சிறந்த தமிழ் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், பதிப்பகங்களுக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Tamil nadu Logo இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அந்த நூல்களைப் பதிப்பித்த பதிப்பகங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, 1330 திருக்குறளை முற்றோதல் செய்யும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 36 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும், மாநில அளவில் கவிதை, பேச்சு, கட்டுரைப்…
Read Moreசித்திரைத் தலைநாளில் சுதந்திர தமிழ் ஈழம் மலர வைகோ வாழ்த்து
சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக கொண்டாடி வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது: சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர். இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே…
Read More