திருத்தணி செவ்வாய் 16ஏப்ரல் 2013 : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மோசடி ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்து கோர்ட்டை ஏமாற்றி ஜாமின் பெற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இவர் எங்கே இருக்கிறார் என தேடி வந்த போலீசாருக்கு ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ.,வை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் டி.எஸ்.பி., பாலச்சந்தர், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கங்காதரன், ஏகாம்பரம் ஆகியோரை கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரை பிடிக்க வீடுகள் மற்றும் அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற…
Read MoreAuthor: NR Sharavanan
அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி முடியும் தறுவாயில் வெடிகுண்டு வெடித்தது. இந்நிலையில் மக்கள் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில வினாடிகளில் மற்றொரு குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். America bomb blast bostan marathan real estate chennai
Read MoreComing Soon – Under construction
Under construction
Read Moreஇந்தியாவில் தங்கம் விலை இன்று மேலும் குறையும்?
சென்னை 16Apr2013: தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை சந்தை நேரம் முடிவடைந்த பிறகு பவுனுக்கு தங்கம் மேலும் ரூ.1,000 குறைந்தது. இந்த சரிவு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) சந்தையில் பதிப்பை உண்டாக்கும். இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தை தொடங்கியவுடன் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.1,000 குறைந்து பவுன் ரூ.19 ஆயிரத்து 72-ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Read Moreதில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி
தில்லி: 16Apr2013: “தில்லி சட்டப்பேரவை தேர்தலில் “ஆம் ஆத்மி’ கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டி. அவர் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது. “கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களைஆம் ஆத்மி’ கட்சி அலுவலகத்தில் அளிக்கலாம்’ என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
Read Moreபழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம்
சென்னை 15Apr2013: பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் (வயது 82) சென்னை யில் மரணம் பழம்பெரும் பின்னணி பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ் தெனிந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். சமீப நாட்களாக உடல்நல குறைவாக இருந்தார். இவர் ஞாயிறன்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Read Moreமீன் பிடிக்கத் தடைக் காலம் தொடங்கியது
தமிழகத்தில் ராமேசுவரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்கத் தடை காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இத் தடை மே மாதம் 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு அமலில் இருக்கும். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்கள் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
Read Moreபிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்
பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆட்சி மன்றக்குழு முடிவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். இது விஷயத்தில் முடிவெடுக்க அக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவு கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில் இருக்காது. இதனை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மோடி…
Read Moreதில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு
உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதல்வர்களின் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (2013ஏப்ரல் 15) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதையடுத்து, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த ஆலோசனையை திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் சார்பில்… இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மாநில சட்ட அமைச்சர் கே.பி. முனுசாமி, உள்துறைச் செயலர் ஆர். ராஜகோபால்,…
Read Moreஇலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றது
இராமேஸ்வரம் 15Apr2013: இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை கைது ஞாயிறு அன்று செய்தது நடுகடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒன்பது புதுகோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் இரண்டு இலங்கை கடற்படை இழுத்து சென்றது என மீனவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறினார்.
Read More