குஜராத் மாநிலத்தில் நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம்

Lion and lioness sit in the middle of road, block traffic குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  இதனால் கிர் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் வனப்பகுதியை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சாலையிலிருந்து வனப்பகுதியில் வனப்பகுதியை பார்த்து ரசித்தனர். அப்போது திடீரென சாலையில் ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் ஜோடியாக வழியை மறித்து அசாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனர். இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி…

Read More

28 வயது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்த 52 வயது மகன்

52-year-old son cremates 28-year-old father சண்டிகரில் கடந்த 45 வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான 28 வயது இந்திய விமான அதிகாரியின் உடலுக்கு, நேற்று அவரது 52 வயது மகன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்தவர் ஹவில்டர் ஜைக்மைல் சிங் என்ற இந்திய விமான அதிகாரி. இவர் கடந்த 1968ம் ஆண்டு,மேற்கு இமாச்சல் அருகே, தெற்கு டாக்கா பனிமலை மேல் ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விமானம் விபத்தில் சிக்கியது. அவர் மரணாமடைந்தது உறுதியான போதும் ஹவில்டரின் சடலம் கிடைக்கவில்லை. மரணமடைந்த போது ஹவில்டருக்கு மணமாகி, 7 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹவில்டரின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இந்திய விமான படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிட்டத்தட்ட…

Read More

இந்தியாவில் தினமும் 4,700 குழந்தைகள் மரணம் அதிர்ச்சி தகவல்

4,700 Indian children under five years die everyday   இந்தியாவில் நாள் தோறும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4,700 குழந்தைகளுக்கும் மேல் மரணித்து வருவதாகவும், குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டங்களில் இந்தியா மிகவும் பின்தங்கி 136வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. World Vision India என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றும் 1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த ஆய்வில் மேலும், “இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில், 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது. மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி…

Read More

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

Five killed in road accident திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் ஒன்று அந்த பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதில் அந்த காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோயினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற மாணவன் ஓணம் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளா சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று . Five killed in road accident Five members of a family, including a child, were killed this morning…

Read More

இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

 Indian who wrote about escaping from Taliban, shot dead in Afghanistan ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி சுட்டு கொல்லப் பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பானர்ஜி 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் ‘Escape From Taliban’ எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார். 1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில்…

Read More

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச்செல்லும் கேரள ஆசிரியர்

A teacher who swims through a river everyday to get to his students கேரளாவில் ஒரு ஆசிரியர் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் பாடம் சொல்லித் தருகிறார். கழுத்தளவு உள்ள தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார் இந்த ஆசிரியர். மாலையிலும் இதேபோல பயணம். அவரது பெயர் அப்துல் மாலிக். 40 வயதாகும் இவர், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். 20 வருடமாக இந்தப் பள்ளிக்கூடத்தில் அவர் பணியாற்றுகிறாராம். ஏன் இந்த நீர்ப் பயணம்.. எதற்காக இப்படி ஒரு பயணம் என்று அவரிடம் கேட்டால், பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுத்தி வரனும். அதற்குள்…

Read More

தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீன நபர்

Chinese man donates body before suicide  சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை தொடர்பான பிரச்சனையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்.ஐ நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வாங்கின் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கி கொண்டிருந்தார். வாங் தனது உடலை தானம் செய்ய…

Read More

ரஷ்ய மாடல் அழகியை எரித்துக் கொன்ற கணவன்

Police question husband in Russian model’s death  ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் வர மனைவிதான் காரணம் என்று சந்தேகமடைந்து கணவனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37) இவர் பிரபல போட்டோ கிராபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். ஒரு முறை இந்தியாவில் மணமகள் அணியும் உடைகளை படம் பிடிக்க திமித்ரி சென்றார். அவருடன் யூலியாவும் சென்றிருந்தார். அப்போது விதவிதமான மணமகள் உடையில் யூலியாவை படம் பிடித்தார் திமித்ரி. அப்போது அவரது அழகில் மயங்கி இந்தியாவிலேயே தனது காதலை சொன்னார். அதை யூலியாவும் ஏற்று…

Read More

தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் ஆசிரியர் தினத்தில் நீக்கம்

Tamil Nadu minister vaigai selvan sudden தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் அமைச்சரவை மாற்றத்தின்போது, சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர் வைகைசெல்வன். இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu minister vaigai selvan sudden In a sudden move, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday sacked…

Read More

பாகிஸ்தானில் ஒரே நாளில் 83,00,00,000 ரூபாய் சம்பாதிக்கும் கிரிமினல்கள்

Pakistan financial capital Karachi black economy generates Rs 830 million daily பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கிரிமினல் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும்…

Read More