4 நாட்களில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 32 சிசுக்கள் மரணம்

32 infants die at Kolkata hospital. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், 32 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள பி.சி. ராய் மருத்துவமனை மாநிலத்திலேயே மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஆகும். இங்கு கடந்த 4 நாட்களில் 32 சிசுக்கள் வரை மரணமடைந்துள்ளதான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமா அல்லது நவீன மருத்துவ வசதிகளின் குறைவு காரணமா என்பது பற்றி விசாரிக்க இரண்டு நபர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. ஆனால் குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை மட்டுமே காரணம் அல்ல என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. மற்ற மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்படுகிற மிக மோசமான இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது என்று மருத்துவமனை…

Read More

இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி சென்னை மதுரவாயலில் தொடங்கியது…

Chennai Fashion Institute(1)

Best fashion technology course in chennai இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி  நிறுவனமான “என்.சி .எப்.டி ஹைட்ஸ்” தற்போது சென்னை மதுரவாயலில் அதன் கிளையை தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முறை மற்றும் புத்தகங்களுடன் சிறந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் இங்கே உங்களுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர்களால்  பயிற்றுவிக்கப்படுகிறது . உங்கள் வெற்றியே எங்கள் குறிக்கோள் ! Best fashion technology course in chennai India’s No1 Fashion Technology Training Institute “Chennai Fashion Institute” now starts its new branch in Chennai at Maduravoyal. They provide World Class Diploma and Certificate Courses in fashion designing with books at reasonable…

Read More

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை

Two Indian Americans shot dead in US, 1 held  அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22) என்பதாகும். அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு இவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களிர் ஒருவன் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் கொலையானவர்களின் உடல்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடிய போலீசார்…

Read More

பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட சிங்கள மந்திரவாதி பலி

Sri Lankan man dies in failed exorcism ritual இலங்கையில் வாழும் புத்த மதத்தினரில் பெரும்பாலானவர்கள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், சோதிடம் மற்றும் மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர் தனது வீட்டில் பேய் புகுந்து விட்டதாக நினைத்து, அதனை விரட்ட வேண்டி மாஸி காஸ்ட்ரோ என்ற மந்திரவாதியை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த மந்திரவாதி, பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தை வைத்து பூஜை செய்து விட்டு, பேயை வீட்டை விட்டு விரட்டி விட, திகிலான பூஜை ஒன்றை செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார். அதாவது தன்னை ஒரு குழியில் வைத்து, மேலே மண் போட்டு மூடி விடும்படியும், குழியினுள் இருந்து கொண்டே மந்திரம் ஓதி பேயை விரட்டி விட்டு,…

Read More

கேரள மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி

13 killed in Kerala as speeding minibus overturns கேரள மாநிலத்தில் இன்று மினிபேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சுமார் 40 பயணிகளுடன் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூச்சலிட்டனர். இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் 12 பேர் இறந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 13 killed in Kerala as speeding minibus overturns The driver…

Read More

திரைக்கு வரும்முன்பே எதிர்க்கப்படும் விஸ்வரூபம்-2

muslim league opposes vishwaroopam 2 விஸ்வரூபம், கமல்ஹாசன் இயக்கி நடித்த திரை படம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது. அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை…

Read More

இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Over 100 cars crash in Britain, two hundred injured இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதின. இவ்வாறு 10 நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூடு பனியால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. ஆனாலும், வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சம் இல்லாமல் பாலத்தைக்…

Read More

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல்

Boney Kapoor gets death threats பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின்…

Read More

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது

Two war ships to Sri Lanka from India இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இலங்கைக்கு நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்தான் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக்கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கு 2…

Read More

சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ

Horrifying fate of Assad’s soldiers executed on camera by Syrian rebels சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை, புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரின் அப்துல் சமத் இஸ்ஸா, முதலில் ஒன்றை வாசித்து துப்பாக்கி சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். இவர் பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக…

Read More