Woman, daughter murdered at Maduravoyal, Chennai மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20). இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் விமலா தேவியும், பவித்ராவும் இருந்தனர். காலை 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று சாமிக் கண்ணு வீட்டுக்குள் சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விமலாதேவி, பவித்ரா ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்து நகை–பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். விமலாதேவி, பவித்ரா ஆகியோர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதற்கிடையே தாய்–மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.…
Read MoreAuthor: NR Sharavanan
பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் சுட்டுக்கொலை
Gunmen kill Pakistan Navy officer in Karachi பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நசீம் இறந்தார். குண்டுகள் துளைக்கப்பட்ட காரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கராச்சியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அதிபர் நவாஸ்ஷெரிப் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது. Gunmen kill Pakistan Navy officer in Karachi A Pakistan Navy officer, Captain Muhammad Nadeem Ahmed, was shot dead…
Read Moreரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ தனியார் Tv மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவு
Private television channel apologize for wrong news: Court Order நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா தொடர்பாக தவறான செய்தி மற்றும் வீடியோவினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னையும், நித்யானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும் இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி…
Read Moreசிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்
US senators offer support for Syria strike சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா குழுவினர் சிரியா மீது போர் தொடுக்கு செனட்டை அணுகினர் செனட் சபை போருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போரினை 60நாட்கலுக்குல் முடித்து திரும்ப வேண்டும் என்றும் செனட் சபை அமெரிக்காவிற்கு கூறியுள்ளது, இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்க சிரியா மீது போர் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது இதற்கிடையே அமெரிக்காவின் போக்கிற்கு ரசியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது. video link: US senators offer support for Syria strike Leading Democratic and Republican senators have reached a deal on a motion authorizing an attack on Syria. this is a momentum to US President…
Read Moreஅமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை
putin warns US action against syria சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும். சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும்,…
Read Moreசீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன
China chemical spill kills thousands of fish சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர். கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும்…
Read Moreவிஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவோம் மு.க.ஸ்டாலின்
Stalin supports actor vijay நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை. ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும், தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது. எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள், பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா? என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!…
Read Moreஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு
Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும்…
Read More10 ஆண்டுகளில் குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம்
793 deaths in ashram schools across Maharashtra in 10 years கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. விசாரணையின் போது…
Read More103 வயது தாத்தாவுக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை
103 year old man gets hip replaced 1910ம் ஆண்டில் சஹீராபாத்தில் பிறந்த மணிக்யம் என்பவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வசித்து வருகின்றார். 103 வயதான இவருக்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உண்டு. மூன்று வாரங்களுக்கு முன்னால், தெருநாய் ஒன்றை விரட்டியபோது கீழே விழுந்த இவருக்கு இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து வலியுடன் செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயது காரணமாக அவருக்கு மயக்க மருந்து கொடுப்பது என்பது கூட சவாலான விஷயமாக இருந்தது. ஆயினும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் டாக்டர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையினை நடத்தி முடித்தது. இந்தத் தகவலை நேற்று மருத்துவமனையில் நடந்த நிருபர்கள்…
Read More