தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு

Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district

தீபாவளி திருநாளையொட்டி மகளை தன் வீட்டுக்கு அனுப்பாததால் அத்திரம் அடைந்த மாமனார் தனது மருமகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சாம்பவர்வடகரையில் சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் தங்கசாமியின் மகன் சக்திவேல். இவர் அதே ஊரில் உள்ள தேரடி தெருவில் இருக்கும் இராமசாமி என்பவருடைய மகள் முத்துமாரியை திருமணம் செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மகளையும், மருமகனையும் தன் வீட்டுக்கு அழைக்க இராமசாமி, சக்திவேல் இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர், தம்பதிகளை தீபாவளிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மாப்பிளையோ தான் வரமுடியாது என்றும் மனைவி முத்துமாரியையும் அனுப்பமுடியாது என்று மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று சக்திவேல் அருகில் உள்ள ஒரு கடை முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இராமசாமி, தனது மகளை என தீபாவளிக்கு அனுப்பவில்லை என கேட்டார். இது விஷயமாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி கைகலப்பானது. இதனால் கோபமுற்ற இராமசாமி, தான் வைத்திருந்த அரிவாளால் சக்திவேலை ஆத்திரத்தில் வெட்டினார்.

இந்த தாக்குதலில் சக்திவேலின் நெஞ்சில் காயம் உண்டானது. காயமடைந்த சத்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சாம்பவர்வடகரை காவல்துறையினர் விசாரணை நடத்தி இராமசாமியை கைது செய்துள்ளனர்.

Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district

Related posts