Photos taken in Register office in Chennai through Web camera to ovoid forgery : Chief minter jayalalitha order implemented
சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு துறை ஆள்மாறாட்டத்தை தடுக்கும் நோக்கில் அங்கு புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கவும் அதனால் பதிவு செய்பவர்கள் மனநிறைவு பெறவேண்டும் என்பதற்காகவும் பத்திரப்பதிவு துறை அலுவலக தினசரி நிகழ்வுகளை வீடியோ காமரா வழியாக கண்காணிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதற்காக, சுமார் 578 சார் பதிவாளர் அலுவகங்களிலும் 3 முகாம் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு நடக்கும் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா வழியாக புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் முறையாக அமலுக்கு வந்துள்ளது.
இதற்கென “எல்காட்” நிறுவனம் இரண்டு கண்காணிப்பு காமராக்களை அமைத்து தந்துள்ளது. இதன் வழியாக நிலங்கள் பதிவு செய்வது, பவர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு புகைப்படம் பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே எடுக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் புகைப்படம் எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் துறைகளில் பத்திரப்பதிவு துறையும் ஒன்று. இந்த துறை மூலம் பொதுமக்களுக்கு மேலும் பயன்கிடைக்கும் வகையில் எளிமைப்படுத்துவதுடன். குறிப்பாக பத்திரப்பதிவு செய்ய வரும் போது, ஆள்மாறாட்டத்தை தடுக்க யார் பெயரில் பதிவு செய்யப்படுகிறதோ? அவர்களை வெப்-காமரா மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.
அத்துடன் “பயோமெட்ரிக்” முறையில் இடது கை பெருவிரல் ரேகையும் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆள்மாறாட்டம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது பண்டிகை விடுமுறை இருந்ததால் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக உள்ளது. காமரா பொறுத்தப்பட்டு உள்ளதால் புரோக்கர்களின் நடமாட்டத்தை கண்டறியவும் முடிகிறது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு, திருமணப்பதிவு, கலப்புமதம் திருமணப்பதிவு, பவர் வழங்குவது போன்றவை பதிவு செய்யப்படுகிறது. இதில் ஆவணப்பதிவு மற்றும் பவர் வழங்குவது போன்றவற்றுக்கு மட்டும் வெப்-காமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
Photos taken in Register office in Chennai through Web camera to ovoid forgery : Chief minister jayalalitha order implemented