லாவொஸ் நாட்டு விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 49 பயணிகள் பலி

Bodies Recovered in Mekong After Laos Plane Crash

Bodies Recovered in Mekong After Laos Plane Crash

லாவொஸ் நாட்டு விமானம் ஒன்று மோசமான வானிலை நிலவரத்தால் ஆறு ஒன்றில் விழுந்து, 11 நாட்டு பயணிகள் 49 பேர் பரிதாபமாகப் செத்தனர்.
லாவொஸ் தென்கிழக்கு ஆசியவில் உள்ள ஒரு நாடு. அங்கு உள்ள லாவோ விமான நிறுவன விமானம் ஒன்று நாட்டினுடைய தெற்கு பகுதியில் இருக்கும் நகரம் ஒன்றிற்கு தலைநகர் வியன்டியானேவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது.

லாவோசில் இருக்கும் மேகாங் எனும் ஆற்றின் கீழ் பறந்து சென்ற போது, விமானத்தில் உண்டான இயந்திர பழுதினால், திடீரென ஆற்றின் நடுவே விழுந்து நொறுங்கி மூழ்கியது. தகவல் அறிந்த உடன் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியை ஆரம்பித்து பலியான உடல்கள் மற்றும் பொருட்களை மீட்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இக்கொடூர விபத்தில், இதுவரை , 49 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலியான பயணிகள்11 நாடுகளைச் சேர்ந்ததவர்கள். ஆற்றிலிருந்து பலியானவர்களின் உடல்கள் மற்றும் உடமைகளை மீட்க உள்ளூர் மீனவர்கள் மற்றும் உள்ளூர் கிராமமக்கள்களின் உதவியுடன் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேகாங் ஆற்றில் விழுந்து மூழ்கிய விமானம் மற்றும் அதன் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. மேலும், இந்த விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சுமார் 20 கி.மீ தூரம் வரை ஆற்று வெள்ளம் இழுத்து சென்று ஒதுங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Bodies Recovered in Mekong After Laos Plane Crash

Bodies Recovered in Mekong After Laos Plane Crash

A Lao Airlines flight crashed on Wednesday in the Southeast Asian nation, apparently killing all 49 people aboard, including passengers from 11 countries, the Lao government said.

Related posts