நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நடிகர் அஜீத்குமார், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து சென்னைக்கு 1,100 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். 16 மணி நேரத்தில் அவர் சென்னை வந்து சேர்ந்தார்.

நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai
நவீன மோட்டார் சைக்கிள்

நடிகர் அஜீத் திரைப்படத்துறைக்கு வரும் முன்பு சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தார். திரைப்பட கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமான பிறகு சர்வதேச அளவிலான பல கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார். போக்குவரத்து விழிப்புணர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, அவர் ஹெல்மட் அணிந்தபடி சமீபகாலமாக, நீண்ட தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்கிறார்.
இதற்கென அவர், ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ எனும் நவீன வசதிகள் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி நீண்ட தூரம் ஒட்டி பிரயாணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் அவர் அணிந்து கொள்ளும் தலைகவசத்திலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவருடைய தலைகவசத்தில் ‘புளூ டூத்’ வசதியும் உள்ளது.

படப்பிடிப்பு

கடந்த மாதம், இந்த நவீன மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து பெங்களூர் வரை நடிகர் அஜித் பயணம் செய்தார். பின்னர், அதே மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்தார்.
அவர் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படம் ‘ஆரம்பம்’ வருகிற தீபாவளிக்கு வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. ‘ஆரம்பம்’ திரைபடத்தின் இணைப்பு வேலை (‘பேட்ஜ் ஒர்க்’) மும்பைநகரில் நடந்து வருகிறது. அதில் கலந்துகொள்ள நடிகர் அஜீத் மும்பைக்கு சென்றார். அங்கு, ‘ஆரம்பம்’ திரைபட வேலைகளை முடித்துவிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு சென்றார். அங்கு, அவர் ‘வீரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனிடையே அவருடைய நவீன மோட்டார் சைக்கிள் விமானம் மூலமாக புனே நகருக்கு கொண்டு வரப்பட்டது.

மீண்டும் மோட்டார் சைகிளில் பயணம்:-

புனேயில், ‘வீரம்’ படப்பிடிப்பு புனே நகரில் முடிந்த பின்னர் நடிகர் அஜீத் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தார். நேற்று முன்தினம் சுமார் காலை 7 மணியளவில் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி கிளம்பினார். அவரும் அவருடைய நண்பர் மனோகரும் ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளிலில் பயணம் செய்தனர். வரும் வழியில், இருவரும் பெங்களூர் நகரத்தில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்து பின்னர் மீண்டும் கிளம்பி அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு பயணமானார்கள். இருவரும் சென்னைக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தனர். இதில் விசேஷம் என்னவென்றால் நடிகர் அஜித், புனேயில் இருந்து சென்னைக்கு 16 மணி நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்து சாதனை புரிந்து இருக்கிறார்.

பேட்டி

மோட்டார் சைக்கிள் ஓட்டி புனேயில் இருந்து சென்னைக்கு வந்த அனுபவம் பற்றி நடிகர் அஜீத், பத்திரிக்கை நிருபர்களிடம் கூறியதாவது:–

இரு சக்கர வாகனம் ஓட்டுவது, மிகவும் ஒரு பொறுப்பான விஷயம். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்கி பலியாகிறார்கள். குறிப்பாக சொல்லபோனால், தலைகவசம் அணியாதவர்கள் தான் விபத்தில் பலியாகிறார்கள். ஆதலால் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியையும் உண்டாக்கவும் நான் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்கிறேன்.

இருசக்கர வாகனத்தில் புனேயில் இருந்து சென்னைக்கு ஒட்டி பயணம் செய்தது, ஒரு தியானம் போலவும், ஒரு தவம் போலவும் இருந்தது.

போக்குவரத்து கலாசாரம்

உனது நண்பன் யார் என்று கூறு, உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் என ஒரு பழமொழி உண்டு. இந்த பலமொழி போலவே ஒரு நாட்டினுடைய போக்குவரத்து கலாசாரத்தை கண்டு அந்த நாடு அந்த அளவிற்கு முன்னேற்றம் அணிந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். நமது நாட்டில் போக்குவரத்து கலாசாரம் கில் நிலையில் உள்ளது, இன்னும் இது மேம்பட வேண்டும்.’’ என நடிகர் அஜீத்குமார் கூறினார்.

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai.

Related posts