சீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்

India will beat china in population growth in the year 2050 சீன நாட்டை இந்தியா மக்கள் தொகை பெறுக்கத்தில் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வு அறிக்கை தெரிவித்திருக்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் எனவும் அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2-ம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அப்போது உலகத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக இருக்கும் எனவும் கூறுகிறது. கடந்த 200 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகை எழு மடங்கு உயர்ந்து தற்சமயம் 710 கோடியாக இருக்கிறது. தற்சமயம், உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 3-ல் ஒருவர்…

Read More சீன நாட்டை இந்தியா விரைவில் பின்னுக்குத்தள்ளும்

2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்பு

‘Pregnant’ Boy, 2, ‘Gives Birth’ To His Parasitic Twin    சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பிறகு ஆராய்ந்த போது அந்த குழந்தையின் தாய் கருவுற்ற போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது எனவும் ஆனால், ஒரு கரு முட்டை இவனது வயிற்றுனுள் வளர்ச்சி பெறாமல் நின்றுள்ளது அறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி எனும் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினது  2 வயது மகன்  ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல் சாதரணமாகவே பிறந்தான். அவனுக்கு படிப்படியாக உடல் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் மிகவும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்டது. வழக்கமாக குழந்தைகளுக்கு வரும் ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’…

Read More 2 வயது சீனகுழந்தையின் வயிற்றில் வளர்ச்சி பெறாத கரு கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான 3 குழந்தைகள் பிறப்பு

U.K. Couple Welcomes Rare Identical Triplets இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை எனவும், 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கில்பெர்ட்டை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என்பதைக் கண்டறிந்தனர். எனவே, இக்குழந்தைகளை…

Read More இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான 3 குழந்தைகள் பிறப்பு

நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை

50 Students Killed in Nigerian Terrorist Attack நைஜீரியாவில்  தீவிரவாதிகள் கல்லூரி மாணவர்கள்  விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த 50 மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொலை செய்தனர். நைஜீரியாவில் குஜ்பா எனும் கிராமத்தில் இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென நுழைந்த தீவிரவாதிகள், உறங்கிக்கொண்டிருந்த  மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதல் நடத்தினார்கள். அலறியடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து ஓடிய கல்லூரி மாணவர்களை துரத்தி சென்று தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள். பல மாணவர்கள் ஓடி சென்று அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டார்கள், எனினும் தேடிச்சென்று அவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 50 மாணவர்கள் இறந்தனர். 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள். சம்பவம் பற்றி அறிந்தவுடன் ராணுவமும், காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்றார்கள். அதற்குள் அந்த  தீவிரவாதிகள் வாகனங்களில் ஏறி தப்பினர்.  அந்த கல்லூரிக்கு வந்த…

Read More நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை

அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் போதைப் பொருள்

3-year-old US girl brings 14 bags of pot to school அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்லம் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமி தினமும் செல்வது போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையின் பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையின் பையில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனும் போதைப் பொருள் இருந்தது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். அவர்களும் உடனே பள்ளிக்கு விரைந்து சென்று போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியினுடைய தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் அந்த போதைப் பொருளை சிறுமியினுடைய…

Read More அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் போதைப் பொருள்

விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பிரிட்டன் நிறுவனம்

Thompson & Morgan launches novel tomato/potato dual plant   ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம். மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல்,…

Read More விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பிரிட்டன் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டு வாலிபர் இந்திய புதையலை கண்டுபிடித்துள்ளார்

Climber finds treasure from Indian air crash on Mont Blanc   இந்திய நபருக்கு சொந்தமான புதையலை ஆல்ப்ஸ் மலையில் பிரான்ஸ் நாட்டு வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதையலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைத்துள்ளார். அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950…

Read More பிரான்ஸ் நாட்டு வாலிபர் இந்திய புதையலை கண்டுபிடித்துள்ளார்

சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு

nose in forehead for a Chinese man சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்ற நபருக்கு நெற்றியினில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனா நாட்டை சேர்ந்த ஜியோலியன் (வயது 22) என்ற வாலிபருக்கு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் மூக்கில் பலத்த காயம் உண்டானது. இந்த காயத்திற்கு அவர் முறையான சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால், முற்றிலும் குருத்தெலும்பு சேதம் அடைந்து  மூக்கு சிதைந்தது. இந்த சிதைந்த மூக்கை மருத்துவர்களால் சரிசெய்ய இயலாத காரணத்தால், ஒரு புதிய மூக்கை அவரது முகத்தில் உருவாக்க தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையை கையாள முடிவு செய்தனர். இந்த மருத்துவ முறைக்காக இடுப்பு எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்சமயம் முழுமையான  வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், கூடிய  விரைவில் அது அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு மூக்கு பகுதியில்…

Read More சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு

நெல்சன் மண்டேலாவுக்கு மனித நேய சாதனையாளர் விருது

Nelson Mandela presented humanitarian achievement award தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர். Nelson Mandela presented humanitarian achievement award Ailing former South African President Nelson Mandela has been presented with a humanitarian achievement award for his contribution to South-South cooperation and sustainable development. In…

Read More நெல்சன் மண்டேலாவுக்கு மனித நேய சாதனையாளர் விருது

கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி

39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall   கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெரிய வணிக வளாகத்தினுள் நேற்று நவீன துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.  அந்த தீவிரவாதிகள் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீர் என  கண்மூடித்தனமாக அங்கே இன்ருந்தவர்களை நோக்கி சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் இந்தியர் இருவர் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலில் பலியானவர்களில் பார்மா கம்பனியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகிய இந்தியர்களும் அடக்கம். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட நான்கு இந்தியர்கள் காயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் நடந்த பொழுது அந்த வளாகத்தில் சுமார் 1,000 பேர் இருந்தார்கள். கென்ய…

Read More கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி