நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Read More வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடிCategory: தமிழக சிறகுகள்
லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6…
Read More லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறைஇந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை: 19 மார்ச் : வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?…
Read More இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை
மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடைபொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை – தலைவர்கள் கண்டனம்
சென்னை : ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொள்ளாச்சியில் கல்லூரி – பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? இதனை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்” . இதுபோல் பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Read More பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை – தலைவர்கள் கண்டனம்கோவையில் பெட்ரோல் திருடும் கும்பல்
கோவை :கோவையில் உள்ள சேரன்மா நகரை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மாதம் 17ஆம் தேதி வழக்கம் போல் வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார்,பிறகு வெளியே செல்வதற்கு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது தான் பெட்ரோல் திருடப்பட்டதை உணர்த்தார். பிறகு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது நூதனமாக முறையில் அவரது பெட்ரோலை இளைஞர்கள் திருடியது தெரியவந்தது.கேமராவில் 2 இளைஞர்கள் முதலில் ஆள் இல்லாதபோது பெட்ரோல் வரும் இடத்தில் கேனை வைத்துவிட்டு செல்கிறார்கள் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் மீண்டு அந்த கேனை எடுத்து செல்கிறார்கள். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடதக்கது.
Read More கோவையில் பெட்ரோல் திருடும் கும்பல்கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் 31 பேர் வேலை பார்த்து வந்தனர் .அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியானம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனமக்கள் ஆவார்கள்.இவர்கள் ஜெயபால் என்பவரிடம் ஒரு குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை பார்க்க வந்துள்ளனர். 3 ஆண்டுக்கும் மேலாக பெற்ற பணத்திற்காக கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்ததால் இது சம்மந்தமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு 31 பேரையும் மீட்டு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
Read More உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !
சென்னை: 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் . இதற்கு காரணம் திருமணத்தை மீறிய உறவுகள் தான். இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள், டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் பற்றியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக திருமணத்துக்கு மீறிய உறவுகளை கணவனோ, மனைவியோ வைத்துக்கொள்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் குறித்து மத்திய மற்றும் மாநில…
Read More திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read More பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!