GSAT-7 : India to launch GSAT-7 from Kourou : Indias-first-defence-satellite-GSAT-7-launched-successfully ஜிசாட் 7 செயற்க்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜி சாட்-7 செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், தொலை தொடர்பிற்காகவும், தொடர்ந்து பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோளானது இன்று அதிகாலை 2 மணியளவில் பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 என்ற ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிப்பதோடு, ராணுவ செயல்பாடுகளுக்காகவும் பயன்படவுள்ளது. குறிப்பாக கடற்படைக்கு பல்வேறு வகையில்…
Read MoreCategory: அறிவியல்
ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனிதமூளை! விஞ்ஞானிகள் முயற்சி
Scientists grow mini human brains from stem cells முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன. இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச் தெரிவித்துள்ளார்.…
Read Moreடாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்
Hackers target Tata servers research organisations இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழகம் ஆகியவற்றின் சர்வர்களில் ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விஷமிகள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் அவர்கள் விஷமம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக் செய்த ஆவணங்களை ஒரு இணையதளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரோவுக்கு மின்னணுவியல் கழகம் கொடுத்த ஒரு ஒப்பந்த ஆவணமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மின்னணுவியல் கழகத்திற்கு கொடுத்த ரூ. 39 கோடி மதிப்பிலான பணி ஒப்பந்த உத்தரவின் விவரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனற். லடாக்கில் மேஸ் தொலைநோக்கியை நிறுவி, அதை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. ஹேக்கர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hackers target Tata servers research organisations The website…
Read Moreஇந்திய கடல் சார்ந்த தகவல் தொடர்புக்கு புதிய செயற்கைகோள்
India’s set to launch satellite No71 – GSAT-7 கடல் சார்ந்த தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் செயற்கைகோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. பாதுகாப்பு செயற்கைகோள் : இஸ்ரோ சார்பில் கடல் தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் பாதுகாப்பு செயற்கைகோள் பிரான்சு நாட்டின் காயான நகரில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் கடல் சார்ந்த பாதுகாப்பு விஷங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த ஜிசாட்–7 செயற்கைகோள். இது கடல் தகவல் தொடர்புகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். இதை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்திய கடல் எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக வழங்கும். ரூ.470 கோடி செலவு : இதுகுறித்து ஒரு மூத்த விண்வெளி…
Read Moreடிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி: கூகுள் நிறுவனம்
robo taxi service by Google considering turning self-driving cars (27-8-13)டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது. தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் கணினி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது. இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும். இதற்கான பணிகள் முடிவடைந்து,இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து…
Read More2023-ல் செவ்வாய் கிரகம் செல்ல பெங்களூர் வாசிகள் முன்பதிவு
நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. லாப நோக்கில்லாத இந்த அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும். செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம்பிப்பது முதல், அங்கு சென்று வாழும்வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது…
Read Moreபுதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்
அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புதிய டைனொசோர் (Dinosaur) இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர் ஐந்து மீட்டர் நீளம் வளரக்கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது. மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இதற்கு இருந்துள்ளது. இந்த ராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என யூட்டா பல்கலைகலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மிருகத்துக்கு நாசூட்டுசெர்ராடாப்ஸ் டைட்டுசை (Nasutoceratops titusi) என்று பெயரிடப்படுள்ளது. வித்தியாசமான உடல் வாகுடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு மிருகமாக இது இருந்துள்ளது என்றாலும் இது ஒரு தாவர-உண்ணி விலங்குதான்.
Read Moreவிரைவில் செவ்வாய் கிரகத்தில் இந்திய செயற்கை கோள்: இஸ்ரோ
Indian satellite to orbit around Mars செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அதில் வியாபர நோக்கமே முன்னிற்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு தொடக்கம், நவம்பர் மாதம் வரை ஏதாவது ஒரு திகதியில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சி பயணம் தொடங்கும். பி.எஸ்.எல்.வி ராகெட் மூலம் செயற்கை கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்தப் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பூமியிலிருந்து செயற்கை கோள் ஏவப்பட்டதும் 10 மாதங்கள் தொடர்ந்து பயணித்து, 2014ம் ஆண்டு இந்த செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். இந்த செயற்கை கோளின் எடை, 15 கிலோவாக இருக்கும். ஐந்து முக்கிய கருவிகள்…
Read Moreவானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளுக்கு முன்னாள் வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று துணைக்கோள்கள் இருக்கும். ஆனால் நாம் வாழும் கிரகமான பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உண்டு. இந்நிலையில் முன்னைய காலங்களில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், அவை ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த முதல் நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற…
Read Moreஇன்று வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலவு
பௌர்ணமி தினமான இன்று(ஞாயிறு,23/06/2013) வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான…
Read More