மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Saravvanan R
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
Read Moreபறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read Moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கு : சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மார்ச் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியிலுள்ள வைத்தியநாதன் பதவி உயர்வு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார். இக்கோரிக்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு விதியின் அடிப்படையில் உதவி பேராசிரியரின் கோரிக்கை பரிசீலிக்கபட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்ததை பல்கலைக்கழகம் செயல்படுத்த வில்லை. இதையடுத்து அவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணி, உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தாமல் பல்கலைக்கழகப் பதிவாளர்…
Read Moreநாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் சென்னை: பட்டா கோரிக்கை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து லோகநாதன் என்பவர் தொடர்ந்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. எனினும் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்க கோரிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் வேணுகோபால், மற்றும் நீதியரசர் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, இவ்விவகாரத்தில்…
Read Moreசட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்
சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர்,…
Read Moreநிர்மலாதேவி பாலியல் புகார் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய தடை உத்தரவு : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை)
Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench)
Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.
நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி
செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள். இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில்…
Read Moreகூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உபயோகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம். சென்னை: 26பிப்ரவரி2019. சென்னை ஆலந்தூரில் இருக்கும் படவேட்டம்மன் கோவிலில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோக படுத்தப்படுவதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளிலும், மேலும் விஷேச நாட்களிலும் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதாக கோவிலுக்கு அருகே குடி இருக்கும் 75 வயது முதியவரான எம்.பீட்டர் வழக்கு தொடுத்துள்ளார். தன் வீட்டு ஜன்னலருகே வைக்கப்பட்டிருக்கும் 3 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது, ஆகையால் வயதான தனக்கும், தன் மனைவிக்கும் மட்டுமின்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தனது பேரனுக்கும் காலை முதல் இரவு வரையில் இந்த அமைதியற்ற சூழலும், அரசியல் அமைப்பு சட்ட்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வுரிமையையும் பறிக்கும் வகையாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு…
Read Moreநீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் படுகாயம் அடைந்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு ஆதரவாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு…
Read More