தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உபயோகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம். சென்னை: 26பிப்ரவரி2019. சென்னை ஆலந்தூரில் இருக்கும் படவேட்டம்மன் கோவிலில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோக படுத்தப்படுவதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளிலும், மேலும் விஷேச நாட்களிலும் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதாக கோவிலுக்கு அருகே குடி இருக்கும் 75 வயது முதியவரான எம்.பீட்டர் வழக்கு தொடுத்துள்ளார். தன் வீட்டு ஜன்னலருகே வைக்கப்பட்டிருக்கும் 3 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது, ஆகையால் வயதான தனக்கும், தன் மனைவிக்கும் மட்டுமின்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தனது பேரனுக்கும் காலை முதல் இரவு வரையில் இந்த அமைதியற்ற சூழலும், அரசியல் அமைப்பு சட்ட்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வுரிமையையும் பறிக்கும் வகையாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு…
Read More