கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.

Victory for congress in karnataka election 2013.மே. 8 பெங்களூரு: நடந்து முடிந்த கர்நாடக சட்டபேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 121 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. மொத்த தொகுதிகள்: 224 காங்கிரஸ்: 121 பா.ஜ.க:40   ம.ஜ.த: 40 க.ஜ.க: 6 மற்றவை: 16 இதில் தொழில் அதிபர் அசோக் கனி உள்ளிட்ட 12 சுயட்சை வேட்பாளர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.  victory for congress in karnataka election Advertisement: Real estate company in chennai: Buying and selling of Residential, commercial, industrial and Agricultural properties. The best deal by best square feet

Read More கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி படுதோல்வி

Karnataka assembly election 2013 Posted by Lion Sathish பெங்களூர், மே. 8 2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி படு தோல்வி அடைந்தது. cயை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரி யார்? என்பதே கர்நாடக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருக்கிறர்கள். Karnataka assembly election 2013

Read More கர்நாடகா சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி படுதோல்வி

ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை

Adams bridge sethusamudram தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்: இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள்…

Read More ராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு

Karnataka state assembly election 2013 பெங்களூர் மே 5: கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கும் காங்கிரசிற்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில். 70% வாக்கு பதிவானது. 2008 தேர்தலில் 64.91%  பதிவானது குறிப்பிடத்தக்கது. Karnataka state assembly election 2013

Read More கர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு

ஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.

IAS topper harith v Kumar 2012 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரள பெண்  ஹரிதா வீ  குமார் முதலிடம்.  இதில் கடந்த முன்று ஆண்டுகளாக பெண்களே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  2012 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்(IAS) பணிகளுக்கு 180 பேரும், ஐ.எஃப்.எஸ்(IFS) பணிக்கு 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ்(IPS) பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2013 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸின் முதன்மைத் தேர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. IAS topper harith v Kumar

Read More ஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932. மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஏப்ரல் 30ம் தேதி பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் 1-3-2011 நிலவரத்தின் படி மேற்குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்…

Read More இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி

சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்பு

Army chief General Bikram Singh briefed the Cabinet committee புதுடெல்லி 01 மே 2013: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லைப்பகுதி நிலவரம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், தற்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர்   கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி பிக்ரம் சிங் கலந்து கொண்டார்.  சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. Army chief General Bikram Singh briefed the Cabinet…

Read More சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்பு

இந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..

Fire in DRDO lab பாலாசூர்: ஓடிஸா மாநிலத்தில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் ஆராய்ச்சி  கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடி குண்டுகள் தானாக வெடித்து சிதறியது. ராணுவதிற்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் ஆகியவை இங்கு தான் சோதனை செய்யப்படும். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 13-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சென்று தீயை அணைத்தனர். உள்ளே இருந்த வெடிகுண்டுகள், ஏவுகணைகள், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. தீயணைப்பு இயந்திரங்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன. “இந்த விபத்தால், அருகில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் சந்திப்பூர் ராணுவ மையம் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. English Summary: Fire in DRDO lab: A massive…

Read More இந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..

பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

Sri Lankan actress Jacqueline Fernandez சென்னை: பிரபுதேவா இயக்கி வரும் இந்திப் படமான ராமைய்யா வொஸ் தாவைய்யா படத்தில் இரண்டாம் கதா நாயகியாக சிங்கள நடிகையான ஜாகுலின் பெணான்டஸ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதால், பிரபுதேவாவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இப் படத்தில்  நடிகர் கிரிஷ்குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றொரு ஹீரொயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு, தமிழர்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சிங்கள நடிகையை  பிரபு தேவா தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. Sri Lankan actress Jacqueline Fernandez Flats sale in Chennai Ayanambakkam

Read More பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்

புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு  சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு  சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. Property sale in Chennai Annanagar…

Read More சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்