IAS topper harith v Kumar 2012 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம். இதில் கடந்த முன்று ஆண்டுகளாக பெண்களே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்(IAS) பணிகளுக்கு 180 பேரும், ஐ.எஃப்.எஸ்(IFS) பணிக்கு 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ்(IPS) பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2013 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸின் முதன்மைத் தேர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. IAS topper harith v Kumar இதையும் படியுங்கள் 2012 ஆண்டிற்கான…
Read More ஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.Category: செய்தி சிறகுகள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932. மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே ஏப்ரல் 30ம் தேதி பாராளுமன்றத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் 1-3-2011 நிலவரத்தின் படி மேற்குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்…
Read More இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா
Australia deports 42 Sri Lankan refugees கொழும்பு: 3 மே 2013: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியா மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இலங்கையில் தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, கனடா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர். முக்கியமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சி செய்யும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை சுமார் 1000 அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. Australia deports 42 Sri Lankan refugees Colombo: Australia deported 42 Sri Lankan asylum…
Read More 42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியாசீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்பு
Army chief General Bikram Singh briefed the Cabinet committee புதுடெல்லி 01 மே 2013: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லைப்பகுதி நிலவரம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், தற்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி பிக்ரம் சிங் கலந்து கொண்டார். சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. Army chief General Bikram Singh briefed the Cabinet…
Read More சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்புசேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்
Sethusamudram Shipping Canal Project சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம். வடசென்னை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பேச உள்ளார். க.அன்பழகன் கடலூரிலும், மு.க.ஸ்டாலின் கரூரிலும், துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர். Sethusamudram Shipping Canal Project இதையும் படியுங்கள் சீன ராணுவம் லடாக் பகுதியில் ஊடுருவல்: பிரதமர் மன்மோகன் சிங் – ராணுவ தளபதி பிக்ரம் சிங் சந்திப்பு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு : 121 கோடி சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா
Read More சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா
New bus terminus to come at Vandalur சென்னை 01-மே-2013: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை 30 மே 2013 முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் :- தமது ஆட்சியில் சென்னை மாநகரில் பெருகிவரும் வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்க படாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்துக்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய…
Read More சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதாஇந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..
Fire in DRDO lab பாலாசூர்: ஓடிஸா மாநிலத்தில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடி குண்டுகள் தானாக வெடித்து சிதறியது. ராணுவதிற்கு பயன்படும் ஏவுகணைகள், பீரங்கிகள் ஆகியவை இங்கு தான் சோதனை செய்யப்படும். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 13-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சென்று தீயை அணைத்தனர். உள்ளே இருந்த வெடிகுண்டுகள், ஏவுகணைகள், பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. தீயணைப்பு இயந்திரங்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன. “இந்த விபத்தால், அருகில் உள்ள ஏவுகணை சோதனை தளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் சந்திப்பூர் ராணுவ மையம் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. English Summary: Fire in DRDO lab: A massive…
Read More இந்தியாவின் முக்கிய ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் தீ..நவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்பு
Tamilnadu Sugarcane Agriculture சென்னை: விவசாயிகளுக்கு நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 25க்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக இருக்கிறது. காகிதம், சர்க்கரை, வெல்லம், கால்நடை தீவனம், மின்சாரம், ஆகியவை கரும்பிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன. கரும்பு உற்பத்தித் திறனை அதிகபடுத்துவதனாலும், செலவுகளை குறைப்பதனாலும் கரும்பு விவசாயிகள் அதிக லாபம் அடைய முடியும் என்பதை மையமாக கொண்டு, ‘நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்” என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். ஆக, இந்த 2013ல் 7500 ஏக்கர் பரபளவில் நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல் படுத்த கட்டளையிட்டு ரூ.12கோடியே 93 லட்ச ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான…
Read More நவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்புசமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்
புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. Property sale in Chennai Annanagar…
Read More சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்விஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்பு
VCK leader Thirumavalavan calls on Vijayakant சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு,…
Read More விஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்பு