சென்னை: தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்தன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.தமிழ் மற்றும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. பிறகு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனு விசாரணைக்கு வந்தபோது தபால் துறை தேர்வுகள் ரத்து…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.கஜா புயலால் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்களும் நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதனால் உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பலர் போராடினார்கள் .போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஆனால் காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60…
Read Moreமருத்துவ மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயத்ததை விட கூடுதலாக வசூலித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Read Moreஅயோத்தி வழக்கில் இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த சமரச குழுவிற்கு அனுமதி- உச்சநீதிமன்றம்
டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது.வரும் ஜூலை 31ம் தேதி வரை அதாவது இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Read Moreகர்நாடக சட்டப்பேரவை தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது – உச்சநீதிமன்றம்
டெல்லி:ஆளும் கர்நாடக காங்கிரஸ் – மஜத எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். ஆனால் அவர் விலகல் கடிதம் சமந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத காரணத்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சட்டப்பேரவைத் தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். “எந்த அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கிறார்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Read Moreவழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ராஜஸ்தான்: அரசியல் அமைப்பு சட்டத்தில் பிரிவு 14ல் இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதித்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது .இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு எழுதப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Read Moreதேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:தேசிய பசுமைத் தீர்பாயத்தில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
Read Moreநிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதி உள்ளதால் அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் பி.இ. படிப்பை முடித்திருந்ததால் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.ஆர்.லக்ஷ்மி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். நீதிபதி கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreஅயோத்தி வழக்கில் சமரசக் குழு ஜூலை 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறி 1992ல் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கு என மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.மீதம் உள்ள பகுதியை , ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த…
Read Moreடெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு தடை இல்லை : டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி :டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று டெல்லி மாநில அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு பெண்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது..இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து மனுதரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More