தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்

Tamilnadu breakfast is best in the world தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது;…

Read More தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். பனாஜி நகரில் உள்ள உல்லாச நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் , தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர். பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியிலிருந்து காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த…

Read More குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நிலையில் ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஆரம்ப காலத்தில். சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது. பொருளாதார நிலையின்மை குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து…

Read More உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

rupee vs dollar 29-8-2013 10:15 இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இன்று சரிவில் இருந்து மீண்டு உள்ளது காலை வர்த்தகம் ஆரம்பத்தில் இருந்தே முன்னேற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நேற்றை விட 130 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ். தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டு நல்ல நிலையில் உள்ளது. rupee vs dollar இதையும் படியுங்கள் குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ் தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம் உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

Read More இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை

Sikh fatally shot in New Jersey   இந்தியாவை சேர்ந்தவர் சுரேந்தர்சிங் (வயது 40). சீக்கியரான இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு கியாஸ் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.வேலைக்கு சென்று வந்த அவரை, 2 கொள்ளையர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது அவர் பணத்தை தர மறுத்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுரேந்தர்சிங்கை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.இதில் மார்பு மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.44 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.இதற்கிடையே சீக்கியர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகள் தவறி விட்டதாக…

Read More நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை

சென்னையில் கட்டுக் கட்டாக ஹாவாலா பணம் பறிமுதல்

kuruvi arrested with rs 30 lakh hawala money சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் கொண்டு வந்த குருவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்” கருவியில் பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த மர்ம நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள…

Read More சென்னையில் கட்டுக் கட்டாக ஹாவாலா பணம் பறிமுதல்

சிறுவனை கடத்தி, கண்களை தோண்டி எடுத்த கொடூரம்

Chinese organ trafficker steals boy’s two eyes சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது. சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை. அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராய் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர். இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர். அந்த பெற்றொருக்கு…

Read More சிறுவனை கடத்தி, கண்களை தோண்டி எடுத்த கொடூரம்

மும்பையில் பிரபல T.V நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை..

Actor assaulted by three men as Mumbai crowd watches   மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான். இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது. ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும்…

Read More மும்பையில் பிரபல T.V நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை..

‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா

Malala Yousafzai awarded 2013 Children’s Peace Prize பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா(15) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர  சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 ஆபரேஷன்கள்…

Read More ‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா

கருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்

Career first, children later: Women put their eggs on ice எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடும் தைவான் பெண்கள், எதிர்காலத்தில் குழந்தைப்பேறைக் கணக்கில் கொண்டு தங்கள் கருமுட்டைகளைச் சேமிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்களாம். நமது பாட்டிக்காலத்தில் எல்லாம் 12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் எனக் கதைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றோ பெண்களின் திருமண வயது கூடிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம், கல்வியறிவு கொண்ட பெண்கள் சிலகாலமாவது உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க நினைப்பது தான். திருமணத்திற்குப் பிறகு இதன் சாத்தியம் குறைவு என எண்ணுகிறார்கள். உலகளவில் பரவிக் காணப்படும் இந்தக் கருத்துக்களால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதும் தைவான் பெண்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஆசியாவில் உள்ள 14 நாடுகளில் பெண்கள்…

Read More கருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்