A windmill fan which fell on a bus killed 5 women near Karur கரூர் அருகே காற்றாலை இறக்கை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி மீது நேற்று பஸ் மோதியதில், பஸ்சில் வந்த ஒரு சிறுமி உட்பட 5 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் படுகாயடைந்தனர். திண்டுக்கல் மாவட் டம் பழனியில் இருந்து கரூருக்கு நேற்று ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த சாமிநாதன் (40) பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர். இதேபோல் தூத்துக்குடியில் இருந்து காற்றாலை மின் நிலையம் அமைக்க விசிறி இறக்கையை ஏற்றிக்கொண்டு ஒரு டிரெய்லர் லாரி மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கட்டாம்பட்டி பிரிவு ரோட்டில், டிரெய்லர் லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்துவதற்காக, இடதுபுறமாக திருப்பினார்.…
Read More காற்றாலை இறக்கை கிழித்ததில் சிறுமி உள்பட 5 பெண்கள் பலிCategory: செய்தி சிறகுகள்
மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே
Anna Hazare ready to endorse Modi if he quits BJP நரேந்திர மோடி பாஜகவிலிருந்து விலகட்டும். அவர் பிரதமராக நான் முதல் ஆளாக ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் மோடியை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் அன்னா. எனது ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மோடிமுதலில் பாஜகவை விட்டு விலக வேண்டும் என்று பதிலளித்தாராம் அன்னா. அப்படி இல்லாவிட்டால் எனது ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினாராம். டெலவரே நகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்பி்ல் அன்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர் இந்தியர்கள். எனக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்ல. மோடி பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒரு அரசியல் கட்சி. எனவே என்னால் ஒரு கட்சியைச் சேர்ந்தவரை…
Read More மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரேஎலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் தடுக்கப்படுகிறது.
specialty of lemon as food and medicine Glory of lemon எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர். இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது…
Read More எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் தடுக்கப்படுகிறது.இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!
India’s Chandrayaan-1 helps NASA find water on moon இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள், தகவல்களை “நாசா’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சந்திரயான் -1 அனுப்பிய தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா, தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்காக சாத்தியங்களை உறுதி செய்துள்ளது. இதற்கு முன்,…
Read More இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை
Man killed for opposing forcing of liquor down monkeys throat டெல்லியில் குரங்கிற்கு மது கொடுப்பதை தடுத்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டெல்லியில் ரயில் நிலையத்திற்கு அருகே இர்பான் என்னும் நபர் ஒருவர், அவரது குரங்குகளை வைத்து வித்தைக்காட்டி சம்பாதித்துவந்தார். இம்மாதம் 14 ஆம் தேதி இரவு, இர்பான் வீதியில் மது அருந்திக்கொண்டிருந்தப்போது, அங்கு ராம் பாபு என்னும் ஒரு நபர் வந்தார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராம் பாபு, இர்பானின் குரங்குகளுக்கு மதுவை கொடுக்க முயன்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த இர்பான் ராம் பாபுவை தடுக்க முயன்றப்போது, அவர் இர்பானின் தலையில் ஒரு செங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ராம் பாபுவை…
Read More குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலைஅரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜி.கே மணி 15கட்சிகளுக்கு அழைப்பு
PMK Gk Mani against tamilnadu government தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்குமாறு பாமக தலைவர் ஜி.கே. மணி 15 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்திவிடலாம். பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது.…
Read More அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜி.கே மணி 15கட்சிகளுக்கு அழைப்புசென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்பு
increasing beggars with children in chennai city இந்திய தலைநகர் டெல்லி போன்றே தமிழக தலைநகரில் அதிகரித்து வருகிறது குழந்தை வைத்து பிச்சை எடுப்பது ,சென்னை மாநகரின் சுற்றுப்புற மாநகரில் கை குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது, புறநகர் சென்னை மற்றும் வளர்ந்து வரும் சென்னை பகுதியான போரூர் பூந்தமல்லி ஆவடி தாம்பரம் கோயம்பேடு பேருந்து நிலையம் வடபழனி போன்ற நகர்ப்புறங்களில் கைக்குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. புறநகர் பகுதியான இவ்விடங்களில் சாலையில் வண்டிகள் சிக்னலை எதிர்ப்பார்த்துநின்று கொண்டு இருக்கும் பொழுது குறிப்பாக கார்கள் பைக் மற்றும் லாரிகளை 4அல்லது 5மாத குழந்தையுடன் வந்து முற்றுகை இடுகின்றனர், அவர்களிடம் பணம் கேட்பது கொடுக்கவில்லை என்றால் குழந்தையை அழவைத்து பணம் கேட்பது என அந்த குழந்தயை மழை வெயில் பாராமல் போக்குவரத்து புகையில் கொடுமை படுத்துகின்றனர். மனம்…
Read More சென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்புபசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்பு
TN announces larger green houses for weavers பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கட்டப்பட உள்ள வீடுகளின் பரப்பளவை 365 சதுர அடியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில், பெரும்பாலான நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தறிகளை வைத்துத் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் 300 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் போதாது என்றும் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர குறைந்தபட்சம் 365 சதுர அடி தேவை என்று எடுத்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 365 சதுர அடியில் வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு…
Read More பசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்புஇந்திய ராணுவசெயற்கைக் கோள் GSAT-7 விண்ணில் செலுத்தப்பட்டது
GSAT-7 : India to launch GSAT-7 from Kourou : Indias-first-defence-satellite-GSAT-7-launched-successfully ஜிசாட் 7 செயற்க்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜி சாட்-7 செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், தொலை தொடர்பிற்காகவும், தொடர்ந்து பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோளானது இன்று அதிகாலை 2 மணியளவில் பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 என்ற ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிப்பதோடு, ராணுவ செயல்பாடுகளுக்காகவும் பயன்படவுள்ளது. குறிப்பாக கடற்படைக்கு பல்வேறு வகையில்…
Read More இந்திய ராணுவசெயற்கைக் கோள் GSAT-7 விண்ணில் செலுத்தப்பட்டதுஜெகம் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி
Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital ஆந்திர மாநிலத்தில் தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஜெகம் மொஹன் ரெட்டி 5 நாள் உண்ணா விரதம் இருந்து வந்தார். திடீர் என இரவு அவர் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பு காணப்படுகிறது. Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital HYDERABAD: Police tonight broke the five-day-old indefinite hunger strike of YSR Congress chief Y S Jaganmohan Reddy against the bifurcation of Andhra Pradesh, at the Chanchalguda jail here and got him shifted to…
Read More ஜெகம் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி