மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர்.
நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான்.
மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் நடிகையான ஸ்ருதிக்கு முன் உரிமை கொடுக்கப்பட்டு, குற்றவாளியை கண்டுபிடித்த காவல் துறையினர் சாதாரண பெண்ணான ஜோதியின் வழக்கில் தீவிரம் காட்டாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நாள் வரை ஏடிஎம் திருடனை நெருங்கிய வண்ணம் உள்ளோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
- ரிப்பன் பில்டிங் கட்டிடம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு
- வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி
- நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்
அடுத்த செய்தி →: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்


