3-year-old US girl brings 14 bags of pot to school
அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் பள்ளிப்பைக்குள் 14 பொட்டலங்களில் போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்லம் பகுதியில் ஒரு பள்ளியில் படிக்கும் மூன்று வயது நிரம்பிய ஒரு சிறுமி தினமும் செல்வது போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையின் பையை திறந்து பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு காரணம் அந்த குழந்தையின் பையில் 14 பொட்டலங்களில் மாரிஜுவானா எனும் போதைப் பொருள் இருந்தது. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு உடனே தகவல் அளித்தனர். அவர்களும் உடனே பள்ளிக்கு விரைந்து சென்று போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். அந்த சிறுமியிடம் விசாரணை செய்து அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமியினுடைய தந்தையின் நண்பர் மெனா(24) என்பவர் அந்த போதைப் பொருளை சிறுமியினுடைய பள்ளிப் பைக்குள் வைத்தது அறியப்பட்டது. இதனைய்யடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மெனாவை கைது செய்தனர்.
3-year-old US girl brings 14 bags of pot to school
A 3-year-old girl accidentally brought 14 bags of marijuana to school in US, which was stuffed in her backpack by a family friend.
இதையும் படியுங்கள்
- நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை
- தாய் 2 மகள்களுடன் சமையல் வாயு சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை
- வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: வண்டி ஒட்டும் போதே நெஞ்சு வலியால் இறந்த லாரி ஒட்டுநர்
அடுத்த செய்தி →: நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 50 மாணவர்கள் படுகொலை

