இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுவர்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறுவர்களும், பலாத்கார வழக்கில் 60 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, 74 சிறுவர்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆட்கடத்தல் வழக்கிலும், 10 பேர் பலாத்கார முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை முன்னணியில் உள்ளன.
இந்தியாவில், சில சமூக மாற்றங்களைக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்று இதன் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
new delhi news
இதையும் படியுங்கள்
- குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு
- ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்
- பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது": நித்ஷ்குமார்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது": நித்ஷ்குமார்
அடுத்த செய்தி →: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு
