டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது.ஜூலை மாதம் இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தது.இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால் இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளதால், அதற்க்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
- தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

