ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஷேக் அப்துல்லா கடந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.சென்னை உயர்நீதிமன்றம் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஷேக் அப்துல்லா தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Related posts