இளையராஜா ராயல்டி கேட்பது தவறு:எஸ்.ஏ. சந்திரசேகர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் . தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது இசைஞானி இளையராஜாவின் ராயல்டி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தயாரிப்பாளர்கள் கஷ்டத்தையும் அவமானங்களையும் சந்தித்து சகித்துக் கொண்டு தான் படம் தயாரிக்கிறார்கள். இதில் அதிகமான படங்கள் தோல்வி அடைவது தான் துரதிர்ஷ்டவசமான விஷயம். அனைத்து கஷ்டங்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கே பாடல்களின் உரிமம் கொடுக்கப்படவேண்டும் .

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் இசையமைப்பாளர்கள் இசைமைக்கிறார்கள். இதன் காரணமாக ராயல்டி கேட்கக் கூடாது. பாடல்களின் ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இந்த ராயல்டியை பெற தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

Related posts