லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து…
Read MoreYear: 2019
15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி
மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள். செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால்…
Read Moreதிருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர். அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு…
Read Moreகும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில் இருக்கும் ஓர் வாடகைக் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம், 6ம் தேதி, திறக்கப்படவிருப்பதாக கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. News in English: Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.
Read Moreதமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு:பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை…
Read Moreகொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்
கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…
Read Moreகும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!
கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Moreகுடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..
ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின்…
Read Moreபொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது. லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .…
Read Moreகள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…
Read More