பீகாரில் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பீகார்:பீகாரின் மூசாம்பூரில் பல குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இந்த மூளைக்காய்ச்சலால் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது சம்மந்தமாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா ,பி ஆர் கவை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுக்கு இன்னும் ஏழு நாட்கள் அவகாசம் உள்ளது.

Read More

வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு

திண்டுக்கல்: திருவண்ணாமலையில் மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) காவலராக பணியாற்றுகிறார். அவர் தனது தங்கையின் தோழி சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றார்.திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனோஜ்குமார் மனு அளித்தார். இதனால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் – சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினர்.பெண் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் தியாகு இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் தியாகுவை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தியாகுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வசந்தியை கைது செய்து, சஸ்பெண்ட்…

Read More

நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Read More

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்தனர். அதில் பாலசுப்ரமணியன் மற்றும் கணேசன் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பிறகு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சுப்பிரமணியனை துணைவேந்தராக நியமிக்க உத்தரவிட்டனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் , முறையான தேர்வு நடத்தி தகுதியான துணைவேந்தரை நியமனம் செய்ய கோரி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அண்மையில் நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Read More

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு

Registrar of Societies postpones Nadigar Sangam 2019 elections 

Nadigar Sangam Election 2019: சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் (ஜூன்) 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்தத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற இருந்த இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட இருந்தன. இந்த நிலையில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியின் நடிகர்கள் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்கள். “நடிகர் சங்க தேர்தல்…

Read More

வைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் இந்திய அரசுக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 2009ல் ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜூலை மாதம் ஐந்தாம் தேதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி இறந்தார்.பிறகு நோயாளியின் உறவினர்கள் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினார்கள் .இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read More

உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மனு நாளை விசாரணை வருகிறது

டெல்லி : மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி இறந்ததால் 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.இதனால் இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலையை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மாநில மத்திய உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் போது மருத்துவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த மனுவை அவசரமாக விசாரிக்க இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று மனுவை பரிசீலித்தது. நீதிபதிகள் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்

திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சினை, முகிலன் மாயமான விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடத்திய போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், இரண்டு தரப்பினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில் திருமுருகன்காந்தி உரையாற்றுயாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதியரசர்கள், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து குரல் கொடுத்தால், இரண்டு பிரிவினைகளிடையே விரோதத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு எப்படி முடியும் எனக் கேள்வியெழுப்பி, திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்கள். News in English: Conditional…

Read More

சினிமா நடிகைகள் காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அரியலூர் மாவட்டம் செந்துநை அருகே 17 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக மணிகண்டன் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்தனர். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினால் நீதி கிடைக்கும் என்று இளம்பெண்ணின் தாய் கருதினார்.இதை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி இளம்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?.  சாதரணமான மனிதர்கள்  புகார் மீது நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 19 வயது மகள் காணவில்லை என புகார் சேலம் மாவட்டத்தை சார்ந்த திருமதி.மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் தனது 19 வயது மகள் காணவில்லை என திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை மகேஸ்வரி தாக்கல் செய்தார். நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை அந்த மனுவில், தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கு…

Read More