திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சினை, முகிலன் மாயமான விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடத்திய போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், இரண்டு தரப்பினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில் திருமுருகன்காந்தி உரையாற்றுயாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதியரசர்கள், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து குரல் கொடுத்தால், இரண்டு பிரிவினைகளிடையே விரோதத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு எப்படி முடியும் எனக் கேள்வியெழுப்பி, திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்கள். News in English: Conditional…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
சினிமா நடிகைகள் காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. உயர் நீதிமன்றம் கண்டனம்
சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. சாதரணமான மனிதர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 19 வயது மகள் காணவில்லை என புகார் சேலம் மாவட்டத்தை சார்ந்த திருமதி.மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் தனது 19 வயது மகள் காணவில்லை என திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை மகேஸ்வரி தாக்கல் செய்தார். நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை அந்த மனுவில், தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கு…
Read Moreரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…
Read Moreமாணவர்கள் பாதுகாப்பு உறுதி கோரி வழக்கு: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.…
Read Moreமருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும்…
Read Moreசெயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 31 2019 தண்ணீர்ப் பற்றாக்குறையைப் தீர்க்க செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?. என்று என மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது பற்றி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி களுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்அய்டிஅய்- என்ற தனி யார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்…
Read Moreபுதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் வருமானத்துக்கு…
Read Moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு
மாநகராட்சி துணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு ஆக்கிரமிப்பு அகற்றும் சம்பவம் சம்பந்தமாக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் திரு.வி.க. நகரைச் சார்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் தாக்கல் செய்த மனுவில், “பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ரெட் ஏரி வரை செல்கின்றது. இச்சாலையில் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. இச்சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே 70 அடியாக விரிவாக்கம் செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அச்சாலை விரிவாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருப்பதாக கடுமையாக உள்ளதாக…
Read Moreசேமநல நிதி செலுத்தாத 5970 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “தமிழகத்தில்…
Read Moreசொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக…
Read More