வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு  சூப்பர் ஹீரோ என்கிறார் பாலிவுட் ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட் முன்னணி நாயகர்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி. இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். 1986ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்…

Read More

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life. ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு 90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது.  இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர்…

Read More

2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்

சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சாக்லேட்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும்…

Read More

நடிகர் எஸ்.வி.சேகர் மோடியின் ஆசியுடன் பா.ஜ.க வில் சேர்ந்தார்

Actor SV Sekar joined in BJP after meeting Narendra modi நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் நல்ல நேரம் பார்த்து இன்று பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்பு காங்கிரஸில் இணைந்து விலகினார். இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார். சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர் சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று  செவ்வாய் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து எஸ்வி சேகர் கூறுகையில், நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில…

Read More

தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை

டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏ.டி.எம் மையங்களை காதல் வளர்க்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த காணொளி இணையதளத்தில் வெளியானது. சிசிடிவி காணொளியை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனைத் தொடந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது. தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏ.டி.எம். மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும்…

Read More

வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி

income tax raid in director lingusamy office in chennai வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனை முடிந்து அதிகாரிகள் முக்கிய பைல்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சோதனை நடந்தபோது லிங்குசாமியோ, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸோ அலுவலகத்தில் இல்லை. லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஏன்? என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. வெறும் இயக்குனராக இருந்த லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி எழில் இயக்கத்தில் தீபாவளி…

Read More

இந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill gates foundation going to build toilet in india இந்திய அரசுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மூலம் இந்தியாவில் கழிவறைகளை கட்டித் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கழிவறைகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. உலகில் 1 பில்லியன் பேர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 638 மில்லியன் பேர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகிறார்கள். மேலும் கழிவறைகள் இல்லாமல் இருக்கும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். ஏழை மக்கள் கழிவறையை கட்ட செலவாகும் பணத்தை உணவு வாங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். எனவே இந்திய அரசுடன் சேர்ந்து பில் கேட்ஸ் கழிவறை கட்டி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். bill…

Read More

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்

6 IAS officers transferred in Tamilnadu  தமிழ்நாட்டில் 6 ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணி இடம்  மாற்றப்பெற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்ட உத்தரவுவில்: திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் இதற்கு முன்பு வகித்த பதவி: மக்கள் தொகை ஆணைய கணக்கெடுப்பு இயக்குநர் திரு.ஸ்வரண் சிங்: தொழில் துறை ஆணையர் – தொழிற்சாலைகள் மற்றும் வணிகம் இதற்கு முன்பு வகித்த பதவி: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.என்.எஸ்.பழனியப்பன்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர்(பஞ்சாயத்துராஜ்). இதற்கு முன்பு வகித்த பதவி: தொழில் துறை முதன்மைச் செயலர் திரு.சி.வி.சங்கர்: தொழில் துறை முதன்மைச் செயலாளர். இதற்கு முன்பு வகித்த பதவி:ஊரக வளர்ச்சி மற்றும்…

Read More

பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமை

Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan பாகிஸ்தான்: இஸ்லாமியருக்கு ஒதுக்கிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த தலித் வாலிபரின் சடலம் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியில், இந்து தலித் இனத்தை சேர்ந்த புரோ பீல் எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் இறந்தார். இறுதி சடங்கு செய்து அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் எனும் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்கள். பின்னர், அடக்கம் செய்த சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கும்பல் ஒன்று அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வீசினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர் சுடுகாட்டில் ஒரு இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க…

Read More

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்

Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…

Read More