Man smashes daughter’s face for continuing her education in MP பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி போலீசாரிடம்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
சென்னையில் ஐஸ் வியாபாரியின் காதை கடித்து துப்பிய ஆட்டொ ஒட்டுனர்
Man bites off vendor’s ear குல்பி ஐஸ்சில் பாதாம் இல்லை எனக் கூறி ஐஸ் வியாபாரியின் காதைக் கடித்துத் துப்பியிருக்கிறார் போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி பீமலேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அயனாவரத்தில் குல்பி விற்றுள்ளார். அப்போது போர்சியஸ் சாலை அருகே, போதை ஆசாமி ஒருவர் பீமலேஷிடம் ஐஸ் வாங்கியுள்ளார். குல்பியை சாப்பிட ஆரம்பித்த போதை ஆசாமி, குல்பியில் பாதாம் இல்லை என தகராறு செய்துள்ளார். மேலும், பாதாம் இல்லாத குல்பிக்கு பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த போதை வாலிபர் திடீரென பீமலேஷின் வலது காதை கடித்து துப்பிவிட்டு ஓட்டம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பீமலேஷ் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் போலீசார்…
Read Moreசோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்
Robert Vadra car புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியின் மருமகன், திரு ராபர்ட் வாத்ரா பயணம் செய்துகொண்டிருந்த காரை முந்திச் சென்ற, டில்லி இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு, காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற ஒரு தொழிலதிபர், தனது காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த,…
Read Moreடெல்லியில் பெண் அமைச்சரின் வகனம் மீது திடீர் தாக்குதல்
Delhi: AAP minister Rakhi Birla’s car attacked புதுடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கட்சியில் 6 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். 6 பேரில் ஒருவர் ராக்கி பிர்லா என் பெண்ணும் ஒருவர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இன்று இவர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது கூடட்டதில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கார் தாக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தாக்குதலால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தவுடன் ஆடம்பர செலவுகளை குறைக்கும் வகையில் மந்திரிகளுக்கு அதிகப்படியான போலீஸ் காவல் தேவையில்லை என்று…
Read Moreபாட்னாவில் கலப்பு திருமணம் செய்த மகன் மீது தந்தை போட்ட அவதூறு வழக்கு
Man files suit against son for inter-caste marriage பீகார் மாநிலம் பாட்னாவில் தன்னை மீறி வேறு சாதிப் பெண்ணை மணந்த மகன் மீது அவதூறு வழக்குப் போட்டுள்ளார் ஒரு தந்தை. இந்த வழக்கைப் போட்டுள்ளவரின் பெயர் சித்தநாத் சர்மா. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் தனது மகன் சுஷாந்த் ஜாசு மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், எனது மகன் கலப்பு திருமணம் செய்துள்ளான். எனவே அவனை நான் ஒதுக்கி வைத்து விட்டேன். இனிமேல் எனது பெயரை அவன் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி எனது பெயரை பயன்படுத்தினால், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 எனக்கு காப்புரிமையாக தர வேண்டும். மேலும் எனது பெயரையும், கெளரவத்தையும் பாழ்படுத்தி விட்டான் எனது மகன். எங்களது விருப்பத்தை மீறி அவன் வேறு சாதிப் பெண்ணை மணந்துள்ளான்.…
Read Moreபாகிஸ்தானில் 900 ஆண்டு பழமையான சிவன் கோவில் 66 ஆண்டுகளுக்கு பின் பூஜை துவக்கம்
Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில், 66 ஆண்டுகளுக்குப் பின், பூஜைகள் துவங்கியுள்ளன. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில், புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 900 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள குளம், சிவனின் கண்ணீரால் உருவானதாக தல வரலாறு கூறுகிறது.இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர்.கடந்த 1947ல், இருநாட்டு பிரிவினைக்குப் பின், இந்தக் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது. இந்நிலையில், 35 கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது.…
Read Moreபீகாரில் பிஸ்கட் திருடியதால் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட 12 வயது சிறுவன் பலி
12 year old Indian boy beaten to death for cookie theft பீகாரில் பிஸ்கட் திருடிய குற்றத்திற்காக பஞ்சாயத்தில் தலைகீழாக கட்டி அடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரிலுள்ள தாடி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பிஸ்கட், சிறிதளவு பணம் மற்றும் புகையிலை திருடியதாக சிறுவர்கள் இருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊர் பஞ்சாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அஜய் யாதவ் என்பவர் அளித்த புகாரின் பேரில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புகொண்டனர். அதன் பேரில் பஞ்சாயத்து அவர்களுக்கு தண்டனை அளித்தது. செய்த தவறுக்கு தண்டனையாக அவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், பஞ்ஜாயத்தார் முந்நிலையில் தலைகீழாக கட்டி அடிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். அபராதத்தைக் கட்ட பெற்றோர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டனர்…
Read Moreகர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் 2012டில் தொழில்துறையில் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது
Gujarat among industrial growth laggards in FY12 2011-12ஆம் ஆண்டில் கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் தொழில்துறை அபரிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திரிபுரா, ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் தொழில்துறை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-10ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 44.8% தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் 2011-12ஆம் ஆண்டிலோ இந்த வளர்ச்சி குறைந்துபோயிருக்கிறது. 2010-11-ல் 1.25% ஆக இருந்த வளர்ச்சி 2011-12ல் 0.99 ஆக குறைந்து போயிருக்கிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலோ 129.92 மற்றும் 101.47% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதேபோல் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் 93.82%, 55.72% தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்கிறது. திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலோ 37.42, 13.12% தொழில்வளர்ச்சி குறைந்து காணப்பட்டிருக்கிறது. Gujarat among industrial growth laggards in FY12 A set of government data released recently seems…
Read Moreஎமிரேட்ஸ் விமானத்திற்குள் புகைப்பிடிக்க முயன்றவரை இருக்கையில் கட்டிப்போட்ட சிப்பந்திகள்
Man tied up after trying to smoke on Brisbane-bound flight சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார். அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாதியாஸ்…
Read Moreசைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனை
A cycle shop owner’s daughter from Nellai has excelled in English skill test and now going to London for higher studies. சாதாரண, கிராமத்து சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சியை சேர்ந்தவர் முப்பிடாதி. அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் சுப்புலட்சுமி, நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிக்கிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த…
Read More