டி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

uma maheswari Rape and Murder case  : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014.

சென்னை ஏப்ரல் 30-

சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

uma maheswari Rape and Murder case at Siruseri Sicot Chennai Kelambakkam

சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார். நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து, சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

நடந்து வந்த உமா மகேஸ்வரி கடத்திக்கொண்டு செல்லப்பட்டார். அருகில் இருக்கும் காட்டு பகுதியில் கொண்டுசெல்லப்பட்டு அங்கு வைத்து, அவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடந்து முதலில் கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். அதன் பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. காவல்துறை ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால், சூப்பிரண்டு நாகஜோதி ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில் இந்த கொலை வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த படுகொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் துப்பு துலக்கினர்.

உமாமகேஸ்வரியை கற்பழித்து கொன்றதாக, கொலை நடந்த பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த மேற்கு வங்காள மாநில தொழிலாளிகள் உத்தன் மண்டல், உஜ்ஜன் மண்டல், ராம்மண்டல் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த காம கொலையாளிகள் மூன்று பேருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இவ்வழக்கில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டார்கள். கொலையாளிகள் மூன்று பேர் மீதும், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்றை தயார் செய்தார்கள். நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில், அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில், மென்பொறியாளர் உமாமகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார், என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இவ்வவழக்கு விசாரணை ஆரம்பமாகும் என நம்பாப்படுகிறது.

uma maheswari Rape and Murder case

A charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer employed by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. The Carge sheet containing 850-pages was filed by The Crime Branch – Criminal Investigation Division of the Tamil Nadu Police framed charges against the accused Utham Mandal, Ujjan Mandal and Ram Mandal, all migrant laborers from Malda district, from West Bengal state. The three accused were working in building construction sites around TCS facility in Siruseri SIPCOT Industrial park.

The prosecution had also submitted all the forensic evidences in support of their claim. Uma Maheswari, the victim and employee of TCS, went missing on the eve of Valentine’s Day. Her body was found in a highly decomposed state after nine days, barely 500 metres away from the main gate of TCS, in a deserted area.

The trio had reportedly intercepted her when she was walking to the bus stop from the office complex around 10.30 pm on Feb 13. They dragged her to a secluded spot where they  sexually assaulted her and robbed her. Ujjan Mandal, the prime suspect, reportedly stabbed the victim.

The case was solved by the  CB-CID and Kancheepuram district police. The kitchen knife used to stab the victim, ear studs, ring, her mobile phone and other belongings were recovered from the possession of the accused. CCTV footage was also obtained from an ATM where the accused attempted to use the victim’s ATM card to withdraw money.

850 pages charge sheet filed in Chengalpet court in uma maheswari Rape and Murder case 

 

Related posts