மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் : 3,793 வழக்குகள் பதிவு

3793 cases filed against political parties in tamilnadu for violation of election commission rules

சென்னை, ஏப்.30 – பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 3,793 வழக்குகள் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் பதிவு செய்யப் பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டு அவைகளில் 3, 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவி்த்தார்.

3793 cases filed against political parties in tamilnadu for violation of election commission rules

கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி, தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக அரசு கட்டிடங்கள், மற்றும் அனுமதி இன்றி தனியார் சுவர்களில் அச்சிடப்பட்ட அல்லது வரையப்பட்ட விளம்பரங்ளை அழிப்பதற்கு மூன்று நாள்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகும் விளம்பரங்கள் சுவர்களில் அழிக்கப்படாமல் இருந்தால் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

மேலும் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்பொழுது அனுமதி இன்றி வாகனங்களில் ஒலிபெருக்கிகளைப் உபயோக படுத்தியது, சட்ட விரோதமாக கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது என பல புகார்கள் கொடுக்கப்பட்டன. அவைகளைக்கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் ஓர் பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் சார்பாக தேர்தல் ஆணையத்திடம் சில புகார்கள் கொடுக்கப்படிருந்தன.

அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் மீது அனுமதி பெறாமல் விளம்பரங்கள் செய்தது தொடர்பான 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டன. அவைகளில் 2904 புகார்கள் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின் போதும், தொகுதிகளுக்குள் செல்லும்போது, வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் தவறாகப் உபயோகபடுத்தியதாக 262 வழக்குகளும், ஒலிபெருக்கிகளை விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக 20 வழக்குகளும் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கூட்டங்களை நடத்தியது மற்றும் பிரசார கூட்டத்தில் விதிகளை மீறி முரணாகப் பேசியது சம்பந்தமாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்

3793 cases filed against political parties in tamilnadu for violation of election commission rules

Chief Electoral Officer Praveen Kumar said in Chennai today that suspectedly a total of Rs. 76.89 crore, meant to be used for wooing voters during the Lok Sabha polls in Tamil Nadu, has been seized by officials of election commission. And that amount has been deposited with the state treasury . “Many electoral teams such as static surveillance teams and flying squads were formed. These Teams seized cash of Rs.25,05,89,211 and non-cash items worth Rs. 51,83,54,626. The Total amount is Rs. 76,89,43,837,” Praveen said.
The non-cash amount which was previously valued at Rs. 27,68,11,829 has been re-evaluated by the expenditure cell. They are Re-evalaluvated based on actual prices. So the revised amount of Rs. 51,83,54,626 has been arrived.
More over the entire process of seizure was video graphed, he said the seized amount of cash and non-cash valuables were handed over to the treasury.

Related posts