DMK accused AIADMK tamilnadu government for misusing the government funds and sources to get benefits in state assembly election to be held at yercaud
அ.தி.மு.க அரசு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் விதிகளை மீறி இடைத்தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க நாடாளுமன்றக்குழுவின் தலைவர் திரு.டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு.வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை இந்த விதி மீறல் பற்றி புகார் ஒன்றை அளித்தார். தி.மு.க வினுடைய அமைப்புச்செயலர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.வி.பி. துரைசாமி ஆகியவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 23-ம் தேதியன்று தமிழக அரசு அறிமுகம் செய்த 660 சிறிய பேருந்துகளில் 3 பக்கமும் அ தி மு க சின்னமான இரட்டை இலை வரையபட்டிருப்பது பற்றி ஓர் புகார் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தி மற்றொரு புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.