Indian Mother and Child Plunge to Death From High-Rise Building in Dubai Jumeirah Village
துபாயில் குடியிருப்பு கட்டிடத்தின் 11 வது மாடி பால்கனியின் நின்றுக்கொண்டிருந்த தாயும் குழந்தையும் தவறி விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 11 வது மாடியில் ஒரு இந்தியக் குடும்பம் வசித்து வந்தது. கடந்த செவ்வாயன்று 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அவரது குழந்தையுடன் பால்கனியின் நின்றுக்கொண்டிருந்தார்.
அப்போது சுமார் 11.30 மணி அளவில், அவர்கள் இருவரும் கால் தவறி 11 வதி மாடியில் இருந்து விழுந்ததாக் தெரிகிறது. இச்சம்பவம் நடந்தப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார்.இந்தத் தம்பதியர் அந்த குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளனர். இறந்த பெண் கடிதம் எதையும் விட்டுச் செல்லவில்லை என்பதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், போலீசார் அவரது கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த கட்டிடத்திற்கு முன் இன்னும் ரத்தக்கறை படிந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.