திருச்சி: கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருச்சியில் உள்ள பீமநகர் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்தபோது திடீரென வந்த 6 பேர் கொண்ட கும்பல் கோபி கண்ணனை மகள் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் மணிகண்டன் விசாரணை நடத்தி உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களில் காட்சிப் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- கோவிட் நிலைமையை மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றனர்: மத்திய மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- நெருக்கமாக இருக்கும் பெண்ணின் வீடியோ பொதுவில் காட்டப்பட்டதால் பெண் தற்கொலை: தானாக முன்வந்து வழக்கை விசாரித்த திரிபுரா உயா்நீதிமன்றம்

