குற்றவியல் நீதி முறையை விரிவாக மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே வெறுக்கத்தக்க பேச்சைச் சரிபார்க்க நடவடிக்கைகளை வழங்க முடியும் என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். குற்றவியல் நீதி முறையை விரிவாக மாற்றியமைப்பு புதுடில்லி: ஐபிசி, சிஆர்பிசி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைக் குறிக்கும் ஒரு விரிவான வரையறை ஆகியவற்றை ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பரிந்துரைகள் இன்னும் செயலில் உள்ளன, உறுப்பினர்களில் ஒருவர் குற்றவியல் அவசர சட்டதிருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். “பல விஷயங்களில் குற்றவியல் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசரம் உள்ளது, ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். வெறுக்கத்தக்க பேச்சை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை என்பதால், நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் பரந்த ஆலோசனைக்கு வைக்கப்பட வேண்டும். நாங்கள் ஞானத்தின் உரிமையாளர்கள் அல்ல, ஆனால் நாங்கள் அளித்த பரிந்துரைகளைப் பார்க்க வேண்டும்…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
Read Moreபுதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் வருமானத்துக்கு…
Read Moreசொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக…
Read Moreஇந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை: 19 மார்ச் : வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?…
Read Moreஅரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை
மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read Moreஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
Read Moreசட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்
சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர்,…
Read Moreநிர்மலாதேவி பாலியல் புகார் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய தடை உத்தரவு : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை)
Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench)
Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து…
Read More