சென்னையில் நடந்த இந்திய திரைபட நூற்றாண்டு விழாவின் போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய திரைபட நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார். இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது. பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர். நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார். இது திரைபட நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர்…
Read MoreCategory: சினிமா சிறகுகள்
பார்வையற்ற தனது ரசிகையின் கனவை நனவாக்கிய நடிகர் ஷாருக்கான்
When Shah Rukh Khan made a blind fan’s wish come true சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது. கரோலினுக்கு ஒரு கனவாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்து கரோலின் கூறுகையில், திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.பின்னர் என்னை கட்டிப்…
Read Moreஜேம்ஸ்பாண்ட் திரைபடத்தில் பயன்படுத்திய கார் ரூ.5.47கோடிக்கு ஏலம்
James Bond submarine car sells for more than five crore Indian Rupees பிரபல ஜேம்ஸ்பாண்ட் திரை படத்தில் பயன்படுத்தப்பட்டஏலம் விடப்பட்டுள்ளது. அந்த நீர்மூழ்கிக் கார் 865,000 டாலருக்கு ஏலம் போனது. இங்கிலாந்தை சார்ந்த பிரபல நடிகர் ரோஜர் மூர், கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த அதனை படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. அவற்றில் 1977-இல் தயாரிக்கப்பட்ட வெற்றி படங்களில் ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற திரைபடமும் ஒன்று. இந்த திரைபடத்தில் கதாநாயகன் ரோஜர் மூர், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும், நீர்மூழ்கிக் கார் ஒன்றை பயன் படுத்தி ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் பிரபலமானது . இந்த காட்சிக்காக ஒரு வெள்ளை…
Read Moreசூப்பர்மேன் உருவம் பொறித்த நாணயங்கள் கனடா நாட்டில் வெளியீடு
Canada issues coins for Superman’s 75th சூப்பர்மேன் கதாபாத்திரம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளில் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் கனடா நாட்டில் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் சூப்பர்மேன் உருவம் பொறித்த7 புதிய நாணயங்களை ராயல் கனடா மின்ட் நேற்று வெளியிட்டது. சூப்பர்மேன் கதாபாத்திரமானது கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உண்மை மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு போராடும் விதமாக சூப்பர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் நாணயங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில கடந்த 1938ம் ஆண்டு வெளியான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் தி நியூ…
Read Moreதிரைக்கு வரும்முன்பே எதிர்க்கப்படும் விஸ்வரூபம்-2
muslim league opposes vishwaroopam 2 விஸ்வரூபம், கமல்ஹாசன் இயக்கி நடித்த திரை படம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது. அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை…
Read Moreநடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு கொலை மிரட்டல்
Boney Kapoor gets death threats பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போனி கபூருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்ம நபர் போனில் கூறுகையில், நீ என் ஆட்களை கைது செய்ய வைத்துவிட்டாய். அதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும். உன்னை உன் வீட்டில் வைத்தே சுடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ரவுடி ரவி பூஜாரியின்…
Read Moreவிஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவோம் மு.க.ஸ்டாலின்
Stalin supports actor vijay நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை. ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும், தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது. எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள், பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா? என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!…
Read Moreஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!
G V Prakash has signed his 1st Hollywood movie ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். G V Prakash has…
Read Moreபாலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய பிரபுதேவா மெழுகுச்சிலை
Prabhu Deva unveils his wax statue இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பெருமையோடு அழைக்கப்படும் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். அதனை இன்று திறந்து வைத்த பிரபுதேவா நெஞ்சுருகி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லொனவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபு தேவாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தா பிரபுதேவா ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்தார். நடன இயக்குநராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த பிரபுதேவா, பின்பு நடிகராகி, அதன்பிறகு இயக்குநராகவும் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால், இந்திக்குப் போனார் பிரபுதேவா.இந்தியில் இவர் இயக்கிய வாண்டட், ‘ரவுடி ரத்தோர்’, ‘ராமையா வஸ்தாவையா’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ்கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை டைரக்டு செய்கிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட…
Read Moreஎன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்: நடிகர் சிவகார்த்திகேயன்
rajini is the one only superstar like the sun and moon sivakarthikeyan கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா தியேட்டரில் இன்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பாடல் சி.டி.யை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட பாபா தியேட்டர் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பவிழம் ஜூவல்லரி லிஜோ சுங்கத், வாசன், தாடி பாலு, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசியதாவது:– சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது. இந்த மக்களின் அன்பும்,…
Read More