30 thousand fake doctors indian medical association balasubramanian தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கவுன்சில் கூட்டம் இந்திய மருத்துவ சங்கத்தின் 280-வது கவுன்சில் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் (தேர்வு) சுரேந்திரன், செயலாளர் ராஜா, பொருளாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய மருத்துவ சங்கம் கடந்த 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் தமிழகம் அதிக உறுப்பினர்களை கொண்ட கிளையில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் இச்சங்கத்தில் 30 ஆயிரம் டாக்டர்கள்…
Read More தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மருத்துவ சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவல்Category: செய்தி சிறகுகள்
அமெரிக்காவில் காதலியை கொன்று மூளை, இதயத்தை சாப்பிட்ட கோடூர காதலன்
Psycho cannibal killer stabs lover to death then eats her brain, heart and lungs அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்தவர். டாம்மி ஜோ பிளாண்டன் (வயது 46). சம்பவத்தன்று பிளாண்டன் போலீசாரை அழைத்து உள்ளார். உடனடியாக போலீசார் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். பிளாண்டன தனது முன்னாள் காதலன் தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் கூறிஉள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது காதலர் ஜோசப் ஒபர்கென்சலே (வயது33) எனபவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பிளாண்டன் போலீசாருக்கு அழைப்பு விடுத்தார். இந்த முறை போலீசார் சென்று பார்த்தபோது பிளாண்டன் வீட்டில் இல்லை. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பிளாண்டனின் உடல் ரத்த வெள்ளத்தில் குளியல் தொட்டியில் கிடந்து உள்ளது. உடனடியாக போலீசார் பிளாண்டனின் உடலை…
Read More அமெரிக்காவில் காதலியை கொன்று மூளை, இதயத்தை சாப்பிட்ட கோடூர காதலன்பெங்களூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
350 Bangalore kids fall sick after lizard spotted in mid-day meal பெங்களூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியில் உள்ள உருது ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மதிய உணவுக்காகத் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் காதர் கூறியதாவது: மாணவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.…
Read More பெங்களூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்மதுரையில் பட்டப்பகலில் 3 பேர் வெட்டிக் கொலை
Gang hacks three youths to death in broad daylight மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர், மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்புராஜ் (வயது 23), பாம்பு நாகராஜ் (18). இவர்கள் இருவரும் கோவையில் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு நாகராஜின் நண்பர் கார்த்திக் (22) என்பவரும் வந்திருந்தார். நேற்று மதியம் 3 பேரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொலையாளிகள் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த…
Read More மதுரையில் பட்டப்பகலில் 3 பேர் வெட்டிக் கொலைநியூயார்க் நகர நிர்வாகம் இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்துள்ளது
New York city to pay $225,000 to Indian girl to settle lawsuit தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம். இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணைகள்…
Read More நியூயார்க் நகர நிர்வாகம் இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்துள்ளதுபாகிஸ்தானில் தாமதமாக வந்த அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள்
Pak politicians ejected out of plane for causing delay பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.பி ஒருவரும் விமானத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகளால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் விமானம் ஏறுவதற்கு காலதாமதமாக வந்தனர். இதனால் விமானத்தில் ஏறிய இருவரும் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் விமானம்: கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. 2 மணி நேரம் காத்திருப்பு: அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் அமைச்சர்…
Read More பாகிஸ்தானில் தாமதமாக வந்த அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள்உலக ஓசோன் பாதுகாப்பு நாள்
world ozone day சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons – CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு…
Read More உலக ஓசோன் பாதுகாப்பு நாள்சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்
Strong solar storm heading to Earth, say scientists மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார். இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த…
Read More சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்லச்சகணக்கான கூகுள் பயனாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருட்டு
4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ (தகவல் திருட்டு) ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய https://isleaked.com/en என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள். உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக்…
Read More லச்சகணக்கான கூகுள் பயனாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருட்டுதிருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்
Newborn girl stolen from medical college hospital நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி சரோஜா. இவர் இரண்டாவது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சரோஜா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரவசத்திற்காக கடந்த 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 9ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பிரவச வார்டு மாடியில் உள்ள குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தனர். சரோஜாவுடன் அவரது உறவினர் என்ற பெயரில் ஜெயலட்சுமி என்பவர் தங்கியுள்ளார். சரோஜாவுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். இந்நிலையில்,…
Read More திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்