Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர். அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின்…
Read More அள்ளி வழங்கிய சூரத் தொழிலதிபர் : தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார்Category: செய்தி சிறகுகள்
வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார்…
Read More வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்
Today is International Day for the Eradication of Poverty உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. “ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி,…
Read More அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்அக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
October 10 – World Day Against the Death Penalty உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறத 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003…
Read More அக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்இந்தியவில் 10 வருடங்களில் சோலார் மின் உற்பத்தியில் 3.25 லட்சம் வேலைவாய்ப்பு
Rooftop solar plants to create 3.25 lakh jobs in 10 years இந்தியாவில் வீடுகளில் சோலார் பேனலை அமைப்பதன் மூலம் நாட்டில் 3.25 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் தற்போது சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டுமிட்டுள்ள தருவாயில் இது முக்கிய தகவல். மேலும் அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சோலார் மின் உற்பத்தியின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் பிரிட்ஜ் டூ இந்தியா என்ற ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சோலார் மின் உற்பத்தி தனல் இந்தியாவில் மற்றும் உலக நாடுகளில் நான்கு வகைகளில் அமைக்கப்படுகிறது. அவை ஸ்மால் ரூஃப்டாப், லார்ஜ் ரூஃப்டாப், யூடிலிட்டி ஸ்கோல் திட்டங்கள் மற்றும் அல்ட்ரா மெகா திட்டங்கள் என்ற அளவில் அமைக்கப்படுகின்றது. இதில் ஸ்மால்…
Read More இந்தியவில் 10 வருடங்களில் சோலார் மின் உற்பத்தியில் 3.25 லட்சம் வேலைவாய்ப்புஇன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்
Total lunar eclipse to be partially visible in India இயற்கை அதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் பொழுது, பூமியின் நிழல், சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தால், சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் என்று மும்பை நேரு கோளரங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 5.54 நிமிடங்களுக்கு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் 11 நிமிடங்கள் மட்டுமே தென்படும். Total lunar eclipse to be partially visible in India A total lunar eclipse, the second and last one of this year,…
Read More இன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது
Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது லோகோவில் “O” எழுத்தும் “L” எழுத்தும் வளர்ந்திருப்பதுபோல் சிம்பிளாக லோகோவை வடிவமைத்துள்ளது. லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட கூகுள் சேவை உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் “தீமைத் தன்மை இல்லாதிருத்தல்” என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. அதனுடன் 30,000 மேற்பட்ட ஊழியர்களை நாடு முழுவதும் வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 16 வருடங்களில் கூகுள் அறிமுகபடுத்தியவை எவை, மற்றும் கூகுள் தொடர்பானவற்றை எமது சில முன்னைய பதிவுகளில் காணலாம். கூகிளிற்கு 15 வயது :…
Read More இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறதுசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறை
Jayalalithaa Sentenced to Four Years in Jail in Corruption Case by Bangalore Court வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம்…
Read More சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறைநவம்பருக்குள் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
Ebola cases to triple by November unless efforts raised ‘எபோலா வைரஸ் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரமாக உயர்ந்து விடும்; நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, அந்த அமைப்பு தெரிவித்துஉள்ளதாவது:மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில், எபோலா நோய் தாக்குதல் உள்ளது. இது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு, 2,800 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 5,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நோயை கட்டுப்படுத்த இன்னும் ஸ்திரமான நடவடிக்கைகள் இல்லாததால், வரும் இரண்டொரு மாதங்களில், இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டக் கூடும். நோய் தாக்கியவர்களில், 71 சதவீதம் பேர் பலியாகியுள்ளதால், இறப்பு அதிகரிக்க அதிக…
Read More நவம்பருக்குள் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதுடெல்லி உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது புலி
White Tiger Attacks And Kills Man Who Fell Into Its Enclosure at Delhi Zoo டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு பிளஸ்டூ மாணவர். அப்போது தவறி உள்ளே விழுந்து விட்டார். அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு வெள்ளைப் புலியும் உள்ளது. இந்நிலையில், இன்று ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார். மதியம் சுமார்…
Read More டெல்லி உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது புலி