Power staff stir to hit water supply in Andhra Pradesh சீமாந்திராவில் ஆந்திரா தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஹைதராபாத் நகரத்தில் மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நகரம் முழுவதும் இருண்டது. 13 மாவட்டங்கள் உள்ள சீமாந்திராவில் ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து 30,000க்கு மேற்பட்ட மின் ஊழியர்கள், 72 மணி நேர வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் துவங்கினர். இதில் 20,000க்கு மேற்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஆந்திரா மாநிலத்தின் தென்பகுதிக்கு உண்டான 7,196 மெகா வாட் மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் தமிழகம், கேரளம், கர்நாடகம், மட்டும் இன்றி ஹைதராபாத் நகரம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல இடங்களும் மின் விநியோகம் இன்றி…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
சிங்கப்பூரில் இருந்து அதிகமாக நகைகள் அணிந்து வந்தவர் கைது
pudukkottai youth from singapore was arrested in chennai airport for bringing too much of gold jewels by wearing in his body சிங்கப்பூரில் இருந்து அளவுக்கு அதிகமாக தங்கநகைகள் அணிந்து வந்திறங்கிய வாலிபரை சுங்க இலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை மற்றும் குடியிரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) தனது கழுத்து மற்றும் கைகளில் அளவுக்கு அதிகமான அளவில் நிறைய நகைகளை அணிந்து வந்து கொண்டு வந்தார். ஆனால் அவர் கொண்டுவந்த சூட்கேசில் நகை எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்து வந்த எந்த தங்கநகைகளுக்கும் எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த சிசுபாலனை சுங்க இலக்கா அதிகாரிகள் தனி அறையில்…
Read Moreகாய்கறிகள், பழங்கள் நமது இல்லதிற்கே வந்து விற்பனை அறிமுகம்.
women self help group sell veggies and fruits for cheap rate பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணி பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் மூலமாக சுமார் 200 இடங்களில் அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்டு மலிய விலையில் உணவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம். தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள்,…
Read Moreமகளின் திருமணத்தன்று இரவு பெற்றோர் மர்ம மரணம்
A day after wedding, bride’s parents found dead in freak accident பொள்ளாச்சி அருகே மகளின் திருமணநாளில் பெற்றோர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆத்துப்பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் இராசு (50). சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர் தர்மேஸ்வரி (46). இவர்களது மகள் மோகனசுந்தரிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த சபரி என்பவருக்கும் வியாழன்று காலை பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் திருமணம் நடந்தது. சபரி-மோகனசுந்தரியின் திருமணத்திற்கு பிறகு, மணமக்கள் மற்றும் இராசுவும் அவரது குடும்பத்தினரும் ஆத்துப்பொள்ளாச்சிக்கு வந்தனர். புதுமணத்தம்பதியை முதலிரவுக்கு அனுப்பிவிட்டு இராசு, அவரது மனைவி தர்மேஸ்வரி ஆகியோர் வராண்டாவிலும், மோகனசுந்தரியின் தம்பி மணிகண்டன் மற்றும் தர்மேஸ்வரியின் தாயார் சின்னத்தாய் ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்திருந்தனர். கடந்த சில நாட்களாக இரவு பகலாக கண் விழித்திருந்து திருமண…
Read Moreஇன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது
Narrow escape for Indigo passengers as plane veers off runway in Bangalore பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்று அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 110 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் நேற்று இரவு 8.10 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கன மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதில் 3 விளக்குகள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து விமான சேவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம்…
Read Moreஉலகின் அதிபயங்கர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது கராச்சி
Karachi termed ‘most dangerous megacity’ in world உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, “அதிபயங்கர நகரம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை…
Read Moreகோவையில் நகைக்கடை அதிபர் ரூ.100 கோடி மோசடி
A Jewellery owner was arrested for cheating Rs 100 cr in Coimbatore கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில்,…
Read Moreபள்ளிக்கூடத்தில் ரேக்கிங் 6-ம் வகுப்பு பயின்றுவந்த சிறுமி பலி
Angry parents ransack Kolkata school after bullied student dies மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பிறகுதான் அவரை திறந்து வெளியே விட்டுள்ளனர். நீண்ட நேரம் தனி அறையில் சிக்கியதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல் அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் திங்கட்கிழமை மாணவியை டிஸ்சார்ஜ் செய்தனர்.…
Read Moreகணவரை மலை மேலிருந்து தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்
Honeymoon murder: woman charged with pushing husband off cliff அமெரிக்காவில் தேனிலவு சென்ற ஒரு புதுப்பெண் தனது கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலைச் செய்துள்ளார். திருமணமாக ஒரு வாரகாலமே ஆன நேரத்தில், ஜோர்டான் என்ற 22 வயது பெண்ணும், கோடி என்ற 25 வயது ஆணும் தேனிலவிற்கு செல்ல திட்டமிட்டு சென்றனர். இந்நிலையில், திருமணம் செய்துக்கொண்டது குறித்து ஜோர்டனுக்கு மாற்று கருத்து இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அன்று இரவு கிளேசியர் தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு முன் ஒரு நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஜோர்டான், நான் இது குறித்து எனது கணவரிடம் பேசவுள்ளேன், இன்று இரவுக்குள் நான் உனக்கு பதிலளிக்காவிட்டால் ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என புரிந்துக்கொள் என அனுப்பியிருக்கிறார். அன்று இரவு அந்த இடத்தில் ஜோர்டனுக்கும், கோடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.…
Read More18 ஆண்டுகளாக இறந்த மகனின் உடலை பதபடுத்தி பாதுகாக்கும் தாய்
Women mummified son’s body with alcohol for 18 years 18 ஆண்டுகளுக்கு முன் ஜியார்ஜியாவில் இறந்த தனது மகனின் உடலைஅவரது தாய் இன்று வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். 1995-ஆம் ஆண்டு ஜியார்ஜியா நாட்டில் இறந்த தனது 22 வயது மகன் ஜோனி பகரத்ஸேஸின் உடலை கடந்த 18 வருடங்களாக அவரது தாய் சியுரி வரத்ஸ்கேலியா பாதுகாத்து கொண்டு வருகிறார். ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் மரணமடைந்தார். இது வரை அவரது மரணதிற்குண்டன காரணம் அறியப்படவில்லை. எனினும் மகனை பிரிவதற்கு மனம் இன்றி தாய் திருமதி சியுரி வரத்ஸ்கேலியா, அவரது சடலத்தை பதபடுத்தி வீட்டிலேயே பாதுகாத்து வருகிறார். இதுகுறித்து தெரிவித்த அந்த தாய், என மகன் மிகவும் நல்லவன், எனது பேரன் அவனது தந்தையை இத்தகைய தோற்றத்தில் பார்க்கவேண்டுமென்ற ஆசை என் மகனுக்கு…
Read More