சென்னை: இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 304B-ல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். மேலும் பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு விலைக்கு வாங்குவோருக்கு வழங்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
இதையும் படியுங்கள்
- நடுத்தர வருமானக் குழுக்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றம் வலைத்தளத்தைத் தொடங்கியது
- சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
- தனது வருங்கால மனைவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் கொலை குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் இரண்டு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது

