Commonwealth summit
26 ஏப்ரல் 2013: இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (இன்று ) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார்.
இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
Commonwealth summit
இதையும் படியுங்கள்
- இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க நிறுத்த வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
- பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு
- இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு
அடுத்த செய்தி →: தமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.
