கிரண்பேடி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் மத்திய அரசு அதிகாரம் வழங்கியது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ வழக்கு தொடர்ந்தார் .கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.உயர்நீதிமன்றம் வழங்கிய அதிகாரம் ரத்து செய்யும் தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது . இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. 7 -ஆம் தேதி நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் பங்கேற்று ஆலோசனை கூறலாம் என்றும் ,ஆனால் .திட்டங்களை கவர்னரே செயல்படுத்த கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் எதிர் மனுதாரராக முதல்வரையும் சேர்க்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு வரும் 21-ஆம் தேதி ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts