போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை

போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார் . சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வரும்காலத்தில் போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வரும்காலத்தில் போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts