அமெரிக்காவில் 9 வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தவறுதலாக பயிற்சியாளர் மிது குண்டு பாய்ந்து மரணம்

Shooting by 9-year-old girl stirs gun debate அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்லஸ் வாகா (39). லேக்கவுசு நகரை சேர்ந்த இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களின் 9 வயது மகள் ஒருவரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுவதற்காக சேர்த்தனர். அச்சிறுமிக்கு சார்லஸ் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இயந்திரத் துப்பாக்கி ஒன்றின் மூலம் சார்லஸ் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read More

துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனையை மதம் மாறச்சொல்லி கணவன் கொடுமை….

 National shooter Tara Shahdeo was cheated and married saying that he is Hindu but after the wedding the husband tortured and forcing to convert as Muslim  துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை திருமதி.தாரா சாதேவ்(வயது 23), தனது கணவர் தான் ஒரு இந்து என்று ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி சித்திரவதை செய்ததாக ஜார்க்கண்ட் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவர் இரஞ்சித் சிங் கோரி எனப்படும் இரஹிபுல் ஹூசைனை தில்லி அருகில் கைது செய்தார்கள். இந்த நிலையில் திருமதி.தாரா சாதேவ் தனது கணவர் இரஹிபில் ஹூசைனிமிருந்து விவகாரத்து பெறஇருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Ms Tara Shahdeo – a National…

Read More

கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…

Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore.. பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார். திரு.சந்திர மோகன் ஷர்மா,  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து…

Read More

இங்கிலாந்தில் கார்ட்டூன் போன்று தன் உருவத்தை மாற்றி கொண்ட 30 வயது பெண்

christina england lady changed like cartoon 1.5 crore spent இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரூ.1.5 கோடி செலவு செய்து கார்ட்டூன் உருவம் போல தன்னை மாற்றி இருக்கிறார். இங்கிலாந்தில் யோர்க்ஷையர் மாகாணம் வேக்பீல்டு நகரை சேர்ந்த 30 வயது பெண் கிறிஸ்டினா. இவர் லிபிசா நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்டினா சுற்றுலா சென்றிருந்த போது சாலையோர ஓவியர் ஒருவரை சந்தித்தார். அந்த ஓவியர் கிறிஸ்டினாவை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தை பார்த்ததும் கிறிஸ்டினாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த கார்ட்டூனை பார்க்கும்போதெல்லாம் தான் ஏன் அந்த ஓவியம் போல் மாறக் கூடாது என்ற எண்ணம் கிறிஸ்டினாவுக்கு தோன்றியது. அந்த ஆசையை அடக்க முடியாமல், கார்ட்டூன் உருவம் போல மாற முடிவு…

Read More

‘காதல் என்றால் என்ன?' விளக்கமளித்த 6 வயது சிறுமி இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது

What is love? 6-year-old’s wise note on love is an eye-opener for all of us 6 வயது சிறுமி ஒருவர் காதல் என்ற வார்த்தைக்கு அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இலண்டனைச் சேர்ந்த எம்மா என்ற 6 வயது சிறுமி தனது காதல் என்பது குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. உண்மையில் இது அச்சிறுமி எழுதியதுதானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. காகிதம் ஒன்றில் மழலையான எழுத்தில் காதலுக்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், “காதல் என்பது உங்கள் பற்களில் சில எப்போது காணாமல் போகிறதோ, அப்போதும் நீங்கள்…

Read More

இங்கிலாந்தில் 3 வயது மகனை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மனிக்கு 11 ஆண்டு சிறை

Indian-origin woman gets 11 years in UK jail for son’s murder இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ் தீப் அதியோகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 3 வயதில் மிகாயில் குலார் என்ற மகன் இருந்தான். சம்பவத்தன்று இவர் தனது மகன் மிகாயில் குலாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தார். அதில் அவனது இடுப்பு, முதுகு, நாடி, முகம், கன்னம், தலை உள்ளிட்ட 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. எனவே, அவன் பரிதாபமாக இறந்தான். எனவே அவனது பிணத்தை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்தார். பின்னர் அதை காரில் 20 கி.மீட்டர் தூரம் எடுத்து சென்று கிர்க்கால்டி என்ற இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டின் பின்புறம் புதரில் வீசினார். தனது மகன் மிகாயில் குலாரை காணவில்லை என நாடக மாடினார். ஆனால்…

Read More

லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…

Read More

தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்

BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election. சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள். அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.…

Read More

இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..

An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…

Read More

நடுரோட்டில் தந்தைக்காக ஐந்து இளைஞர்களை எதிர்த்து நின்று போராடிய இளம் பெண்

a girl at meerut single handedly beat two eve teasing youths நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பல கோணங்களில் பேச்சுக்கள் நடந்து வரும் வேளையில் 13 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகளுடன் தந்தை பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது பைக் ஒரு கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர்.…

Read More