தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை

17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard

17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard

தருமபுரி அருகில் ஓடும் ரயிலை நிறுத்தி அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் பெண் பயணிகளிடம் சுமார் 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கி அதிகாலையில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே செல்கையில், ஒரு பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் திடீரென நின்றுள்ளது. அப்பொழுது, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியிலிருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது பற்றி டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்த போது, 3 பெண் பயணிகள் அணிந்திருந்த சுமார் 17 பவுன் தங்க நகைகளை கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையர்கள் பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, நகை கொள்ளை குறித்து ரயில்வே பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் ரயில்வே ஐஜி மற்றும் டிஐஜி நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும்  ரயிலில் செயினை பிடித்து இழுத்து நிறுத்தி காருவள்ளி அருகே ரயில் பயணிகளிடம் 17 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், ஐஜீ சீம அகர்வால், டிஐஜி பாஸ்கரன் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினர். ஓடும் ரயிலை நிறுத்தி கொள்ளையடித்த 5 பேர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials of IG and DIG visited the invested places today

Visit bestsquarefeet.com for Building and construction 

Related posts