தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்க கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Chennai Highcourt

சென்னை: தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் , சர்வதேச விமானங்களை தரையிறக்க, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர தேவையான அனுமதி வழங்க கோரி திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது . மனு டாக்டர் நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். திமுக கட்சி சார்பாக மூத்த வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜர் ஆனார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன் மத்திய அரசுக்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்டார், மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அரசு பிளீடர் வி. ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் மாநிலத்திற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர்.

Related posts