ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா.
இது இயல்பாக ஒரு பழமாகும், ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.
உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன.
உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.
ஆரோக்கியமான இதயம்
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.
இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.
இரத்தத்திற்கு ஏற்றது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது.
இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.
ஆரோக்கியமான மூளை
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.
ஆரோக்கியமான சருமம்
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது.
இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது.
புற்றுநோய்
இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான பார்வை
பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும்.
வலுவான கூந்தல்
பிஸ்தாவை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது.