மும்பை விமான நிலையத்தில் முன் அனுமதி கடிதம் பெறாத ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் பறிமுதல்

Miss Asia Pacific World 2013 Srishti Rana’s crown seized at Mumbai airport

Miss Asia Pacific World 2013 Srishti Rana's crown seized at Mumbai airport

இந்த ஆண்டின் ஆசிய பசிபிக் அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய அழகியின் வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி தென் கொரியாவில் இருக்கும் புஷன் நகரில் ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இதில் 21 வயது இந்தியா அழகி சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு வைரங்கள பதித்தப்பட்ட கிரீடம் ஒன்றை கடந்த ஆண்டு இந்த அழகி போட்டியில் வென்ற ஹிமாங்கினி சிங் யாது சூட்டினார்.
மிகவும் சந்தோஷத்தோடு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவிற்கு ஏராளமான மக்களும் நண்பர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Miss Asia Pacific World 2013 Srishti Rana’s crown seized at Mumbai airport

ஆனால் இது வெகு நேரம் நீடிக்கவில்லை. அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சூட்டப்பட்ட கிரீடத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான இறக்குமதி சுங்க வரியை கட்டிவிட்டு கிரீடத்தை பெற்று செல்லும்படி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

தற்காலிகமாக அவர்கள் அந்த வைர கிரீடத்தையும் பறிமுதல் செய்துவைத்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளில் பெற்ற பரிசுகளை இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள், மத்திய சுங்கம் மற்றும் தீர்வை துறையினரிடம் முன்கூட்டியே தெரிவித்து வரிவிலக்குக்கான அனுமதி கடிதம் பெற வேண்டும்.

சிரிஷ்டி ராணா அத்தகைய அனுமதியை பெறாததால் கிரீடம் பறிமுதல் செய்யப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 Miss Asia Pacific World 2013 Srishti Rana’s crown seized at Mumbai airport

Related posts