கோவில்பட்டியில் 5 பேர் கொண்ட கும்பலால் 2 பேர் வெட்டி கொலை

Two friends were hacked to death in Kovilpatti by a 5 member gang

Two friends were hacked to death in Kovilpatti by a 5 member gang

தென் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொழில் நகரங்களில் ஒன்றான கோவில்பட்டியில், ஐந்து பேர் கொண்ட கும்பல்  2 நண்பர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது.

பாலமுருகன் கோவில்பட்டியைச்சேர்ந்தவர். இவருடைய நண்பரின் பெயர் முருகன். பாலமுருகன் கோயில்பட்டி நகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த இரு நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து, அவர்கள் 5 பேரும் சேர்ந்து பாலமுருகனையும் முருகனையும், சரமாரியாக அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களைக்கொண்டு வெட்டிச்சாய்த்தனர். இந்த பயங்கர தாக்குதலில் இரு நண்பர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

municipality staff and his friend were killed a un known gang in Kovilpatti

இந்த கொடூர இரட்டைக் கொலை தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு நண்பர்களின் பிரேதத்தை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த இரட்டைக் கொலை என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க காவல்துறையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Two friends were hacked to death in Kovilpatti by a 5 member

municipality staff and his friend were killed a un known gang in Kovilpatti

Related posts